அதன்பின் இயேசு வந்து அழைத்தார் Tulare, California, USA 64-0213 1பரிசுத்த யோவான், 11ஆம் அதிகாரம் 18-வது வசனம் முதல் நான் வாசிக்க விரும்புகிறேன். பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது. யூதரில் அநேகர் மார்த்தாள் - மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி; நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்; ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். (அதைக் கவனியுங்கள்!) இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து; போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள். 2இப்பொழுது நாம் ஜெபிப்போம். பரலோகப் பிதாவே, நாங்கள் இப்பொழுது உம்மை நோக்கி காத்திருக்கையில் இவ்வார்த்தைகளை, இந்த இரவில் எங்கள் இருதயத்திற்கு உறுதிபடுத்தித் தாரும். உம்முடைய வார்த்தை, உமது ஊழியக்காரன், இந்த பொருள் யாவும் உமக்கே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். நீங்கள் அமரலாம். 3நான் இங்கு இருப்பதன் நோக்கம் என்னவென்றால் தேவனுடைய மக்களுக்கு உதவ பிரயத்தனம் செய்வதற்காகத்தான். பிணியாளிகளின் மேல் கை வைத்து ஜெபம் செய்வதற்கு மாத்திரமல்ல, நம் மத்தியில் இருக்கும் இயேசு கிறிஸ்துவை அவர்கள் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், நம் மத்தியில் உள்ள தேவனுடைய குமாரன். நான் இன்றிரவு அதன்பின் இயேசு வந்து அழைத்தார் என்ற தலைப்பின் மேல் பேசப் போகின்றேன். 4இப்பொழுது நாம் பேசுகின்ற அந்த நேரமானது துக்கம் நிறைந்த ஒரு நேரமாக இருந்தது. நமது ஆண்டவரைக் குறித்த வரலாற்றை நீங்கள் படித்திருப்பீர்களானால், இந்த லாசரு அவருக்கு மிகச் சிறந்த நண்பனாக இருந்தான் என்று பார்க்கலாம். அவர் வந்து... யோசேப்பு சென்ற பிறகு அல்லது அவர் அவ்விடத்தை விட்டு, மார்த்தாள், மரியாள், லாசருவுடன் வந்து இருந்தார். அவர்களுக்கு ஒரு உண்மையான நண்பனாகவும், ஒரு போதகரைப் போலவும் அவர் இருந்தார். அவருக்கு சிறிய ஆடைகளையும், அணிந்து கொள்ள ஒரு மேற் சட்டையையும் தைத்துக் கொடுத்தனர். இவ்வாடையானது ஒரு தையல் விளிம்பு கூட இல்லாமல் நெய்யப்பட்டது என்று கூறப்படுகின்றது. அவர்கள் அவரில் விசுவாசம் கொண்டிருந்தனர். இவைகளையெல்லாம் அவருக்குச் செய்தனர். அவர்கள் அவரைக் குறித்துக் கண்டு, அவரை விசுவாசித்தவர்கள் ஆவர். அவரைப் பின்பற்றுவதற்காக தங்கள் சபையையும், மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டனர். அக்காலத்தில் இது ஒரு பெரிய காரியமாயிருந்தது. ஏனெனில் சபையை விட்டு வெளியே வருதல் மரண ஆக்கினைக்கு பாத்திரமானதாயிருந்தது. 5ஆனால் இந்த இயேசுவோ... அவர்கள் சொல்கின்றபடி சுற்றித் திரிந்து, அவர்கள் சபைகளைக் கிழித்தெறிந்து, அவர்களுடைய ஆசாரியர்களைப் பற்றி தீமையானதைப் பேசி, அவ்வண்ணமே அவர் அவர்களுக்கு பெருந்தீமையைச் செய்தார் என்று நினைத்தனர். ஆதலால் அவரைப் பற்றி அறிக்கை செய்தால் கூட யூத சபையிலிருந்து புறம்பாக்கப்படும் சூழ்நிலை இருந்தது. பிறகு சபையிலிருந்து நீ தள்ளப்பட்டால் மீட்கப்படும்படியான வாய்ப்பே உனக்கு இல்லையென்று அவர்கள் கருதினர். பரிசேயர், சதுசேயர் அல்லது ஏதாவது ஒரு குழுவில் நீ இல்லை என்றால், அல்லது அதற்கு வெளியே இருந்தால் மன்னிப்பே கிடையாது. எங்களுக்கு உரிமையிருந்தால், நினைக்கும்போதெல்லாம் உங்களை வெளியே உதைத்து தள்ளலாம் என்று கூறினார்கள். ''உங்கள் பாரம்பரியங்களாலே தேவனுடைய வார்த்தைகளை அவமாக்கினீர்கள்'' என்று இயேசு சரியாகச் சொன்னார் பாருங்கள்? 6அதே காரியம் இப்பொழுது திரும்பவும் நடக்கின்றது. ஏனென்றால் வரலாறானது ஒரே சம்பவத்தை அடிக்கடிக் காட்டுகிறதாயிருக்கிறது என நாம் காணலாம். இதைச் சொல்வதற்கு சற்று வருத்தமாயிருந்தாலும், திரும்பவும் இக்காரியங்கள் நடக்க வேண்டும் என்று தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டுள்ளது. ஆதலால் மறுபடியும் அது நடந்துள்ளது. இயேசுவை யாரும் சரியாக நினைத்துப் பார்க்கவில்லை என்பதை நாம் காண்கிறோம். அநேக சமயங்களில் மக்கள் தங்களோடு உடன்படாத மனிதனை குற்றங்காண விழைவார்கள். நாம் அப்படிச் செய்யலாகாது. நாம் ஒருவரோடு ஒருவர் உடன்படாமல், இன்னும் நண்பர்களாக இருக்கலாம். நான் ஒரு மனிதனிடம் முரண்பாடான கருத்தை உடையவனாயிராமல், அவனை இன்னுமாய் நேசித்து அவனுக்காக ஜெபித்து, வேதத்தின் பேரில் அவனோடு முரண்பாடான கருத்தை கொள்வேனானால், அவன் வெளிச்சத்தை நன்றாக கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பிறகு அவனிடம் ஒன்றும் கூறமாட்டேன். நான் எப்போதும் அவனிடம் உடன்படாதவனாயும், அதே நேரத்தில் நண்பனாகவும் இருப்பேன். ஏனென்றால் அவனை நேசிக்கின்றேன். அவன் இழந்து போகப்பட நிச்சயமாக நான் விரும்பமாட்டேன். அவனும் என்னிடம் இதே விதமாக நடந்து கொள்ளவேண்டும். நாம் இழந்து போகப்பட விரும்பமாட்டோம். நாம் நமது சிந்தனைகளுக்கெல்லாம் அடித்தளமாக வார்த்தை என்ன கூறுகின்றதோ அதன் மேல் தான் அவைகளை அமைக்க வேண்டும். வார்த்தையானது சத்தியமாகயிருக்கட்டும். நமது பிரமாணமோ அல்லது நம்முடைய சிந்தனைகளோ அல்ல, அவர் என்ன கூறுகின்றார்; தனிப்பட்ட வியாக்கியானம் அல்ல, வார்த்தை என்ன கூறிற்று என்று பார்த்தல் அவசியம். 7அன்று ஒரு இரவில், ஊழியக்காரர்களின் காலை உணவு கூட்டத்தில் புனிதத்துவத்தைப் பாழாக்குவதைப் போல காணப்பட்ட ஒரு செயலைப் புரிந்தேன். நான் இயேசுவை வழக்கு விசாரணையில் (trial) வைத்தேன். அன்றைக்கு அவரை எப்படி நடத்தினார்களோ, “அந்தப்படியே இந்நாளிலும் செய்கின்றனர்'' என்று நான் கூறினேன். அதை சிறிது நேரம் மறுபடியுமாக அதைச் செய்தால் நலமாயிருக்கும் என்று நான் கருதுகிறேன். நான் சொன்னபடியே பார்க்கலாம்... லூத்தரின் சீர்திருத்த காலத்திலே, விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று லூத்தர் கூறினார். ''விசுவாசிக்கிறவன் எவனோ அதைப் பெற்றுக் கொள்வான்''. ஆனால் அநேகர் அவர்கள் விசுவாசிப்பதாகக் கூறி அதைப் பெற்றுக் கொள்ளாதிருந்தார்கள் என்று நாம் பார்க்கிறோம், ஜான் வெஸ்லியின் காலத்திலே பரிசுத்தமாக்கப்படுதல், முழுவதும் பரிசுத்தமாகுதல் என்ற இரண்டாவது ஆசிர்வாதத்தைப் பெற்று மகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள். ''எல்லாரும் ஆர்ப்பரித்தோம் பெற்றுக் கொண்டோம் என்றனர்“ ஆனால் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று அறிந்து கொண்டார்கள். அநேகர் சப்தமிட்டனர். ஆனால் அதை உடையவர்களாக இல்லை. பெந்தெகோஸ்தே நாளிலே ஆவிக்குரிய வரங்கள் திரும்ப அளிக்கப்படும் நேரம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வந்துள்ளது. அந்நிய பாஷைகளை பேசுகிறவன் அதைப் பெற்றுக் கொண்டான்'' என்றனர். அந்நியபாஷைகளில் பேசினவர்கள் அநேகர் அதைப் பெற்றுக் கொள்ளவில்லையென்று நாம் பார்க்கிறோம். 8''ஆவிக்குரிய கனி அதுதான்'' என்று அவர்கள் கூறுகின்றனர். ஓ, இல்லை. ஆவிக்குரிய கனி அதுவல்ல. கிறிஸ்தவ விஞ்ஞானத்தில் சிறிதளவும் கூட... அன்புதான் ஆவிக்குரிய கனியாகும். பிறகு அவர்கள் எல்லோரைக் காட்டிலும் அதிக அன்புடையவர்களாய் இருந்து, இயேசு கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை நிராகரித்து, அவரை ஒரு தீர்க்கதரிசி என்றும் சாதாரண மனிதன் என்றும் அழைக்கிறார்கள். பாருங்கள்? ஆதலால் அது கிரியை செய்யாது. இதைக் குறித்து நான் ஒரு நிமிடத்திற்கு கேள்வி எழுப்பவிழைகிறேன். இயேசுவை விசாரணைக்கென்று (trial) நாம் எடுத்துக் கொள்வோம். இந்த மேடையினின்று நான் கொடுக்கப் போகும் இந்த அறிக்கைக்காக தேவன் என்னை மன்னிப்பாராக. ஆனால், உங்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு நிமிடம் அவருக்கெதிராக நான் இருக்கப் போகிறேன். பாருங்கள்? 9“இன்றிரவு நான் இரண்டு மனிதர்களைக் கொண்டுள்ளேன்; (நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றேன்) அன்று நசரேயனாகிய இயேசு பூமியில் இருந்த நாளுக்கு நான் சென்றிருந்தேன். இப்பொழுது இந்த நசரேயனாகிய இயேசுவிற்கெதிராக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக நான் உங்களிடம் வந்துள்ளேன். அன்பே தேவன் என்று நாமெல்லாரும் அறிந்துள்ளோம். வேதம் அவ்வாறு கூறுகின்றது. சரி, அன்பானது, ஆவியானது... நீடிய பொறுமை, தயவு, சாந்தம் மற்றவை. நான் இப்போது உங்களிடம் சிலவற்றைக் கேட்கப் போகிறேன். இப்பொழுது நாம் கிறிஸ்தவர் என்று அழைக்கப்படுகின்ற ஒருவரைக் குறித்து எடுக்கப் போகிறோம். ''உன் வயதான ஆசாரியனைப் பார். அவருடைய மூத்த - மூத்த முப்பாட்டனாரும் ஒரு ஆசாரியன் ஆவார். ஆசாரியனாக வேண்டும் என்றால் அவர் லேவிக் கோத்திரத்தில் பிறந்தாக வேண்டும். உன்னைப் போன்ற வாலிப ஜீவியம் அவரால் செய்ய முடியாதென்று நாம் காண்கிறோம். அவர் என்ன செய்கிறார்? வேத வார்த்தையைப் படிப்பதற்காக அவர் தன்னையே தியாகம் செய்கிறார். இரவும் பகலும் அதைப் படித்து அந்த சுருளில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் உறுப்பையும் மனப்பாடமாக அறிந்து கொள்ள வேண்டியவராய் இருக்கிறார். அவர் அதை முழுவதுமாக அறிய வேண்டும்''. 10“அதன்பின் உன் தாயையும், தகப்பனையும் விவாகத்தில் புருஷனும் மனைவியுமாக இணைத்தது யார்? உன்னுடைய தேவ பக்தியுள்ள வயதான ஆசாரியன்தான். உன் தந்தை தன் நிலத்தை பணத்திற்கு அடகு வைத்து, திருப்பிச் செலுத்த பணமில்லாதிருந்து, அடகுக்காரர்கள் நிலத்தை அபகரிக்கவிழைந்தபோது உன் தந்தைக்காக நின்றது யார்? உன்னுடைய அன்பான, வயதான ஆசாரியன் தான். உன் தாய் உன்னைப் பெற்றெடுக்கும் போது அந்த அறையிலே உன் தாயிற்கருகில் இருந்தது யார்? உன்னுடைய அன்பான, வயதான ஆசாரியன்தான். நீ சுகவீனமாயிருக்கும் போது தேவை இருக்கும் பட்சத்தில் உன்னிடத்திற்கு வருபவன் யார்? உன்னுடைய வயதான, அன்பான ஆசாரியன். எட்டாம் நாளிலே உனக்கு விருத்தசேதனம் செய்து உன்னை தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து உன்னை ஆசீர்வதித்தது யார்? உன்னுடைய அன்பான வயதான ஆசாரியன். உன்னுடைய தாயும் தந்தையும் விவாகரத்து செய்ய முனைந்தபோது அவர்களைத் திரும்பவும் கொண்டுவந்து பிணைத்தது யார்? உன்னுடைய அன்பான, வயதான ஆசாரியன். அக்கம் பக்கத்தில் பிரச்சனை இருந்தால் அதைப் பார்த்துக் கொள்வது யார்? நிச்சயமாக உன்னுடைய அன்பான வயதான ஆசாரியன் தான்''. 11தேவனுக்கு பலி செலுத்த ஒரு ஆட்டுக்குட்டி தேவையென்று வேதம் கூறுவதை இந்த அன்பான வயதான ஆசாரியன் அறிவான். வாணிபத் துறையில் (businessman) ஈடுபட்டுள்ள மக்களாகிய உங்களால் ஆடு வளர்க்க முடியாது. ஆதலால் அங்கு சில கடைகளை அமைத்து ஆடுகளை விற்றார்கள். வணிகர்கள் அங்கு சென்று ஆடுகளை வாங்கி தங்கள் ஆத்துமாவிற்காக, தேவன் விரும்புகின்ற பலியை செலுத்த ஏதுவாயிருந்தது. இயேசு என்னும் இந்த வாலிப நபர் யார்? எங்கிருந்து இவர் வந்தார்? இவர் பிறப்பு கன்னிப் பிறப்பு என்று கூறுகிறார்கள். ஒப்புக் கொள்ள முடியாத முட்டாள்தனமான இதை யாராவது கேள்விப்பட்டிருப்பார்களா? இவருடைய தாய் யோசேப்பை மணப்பதற்கு முன்பாகவே இவரைச் சுமந்திருந்தாள். இப்பொழுது, அவர் பிறக்கும்போதே அவப்பெயரையுடையவராய் இருந்தார் என்று நாம் அறியலாம். எந்த ஐக்கியச் சான்றிதழ் இவரிடம் உள்ளது? இவர் தேவ மனுஷனாய் இருந்தால், எந்தப் பிரிவை, குழுவை இவர் சேர்ந்திருந்தார்? உன்னுடைய ஆசாரியன் அந்த வார்த்தையை அறிவதற்கென மிகவும் ஆழ்ந்து, ஆழ்ந்து படிக்கின்ற போது இங்கே இவர் வந்து அவர் கட்டினதையெல்லாம் கிழித்தெறிந்துக் கொண்டிருக்கின்றார். அதை “தேவன்'' என்று உன்னால் அழைக்கமுடியுமா? நிச்சயமாக முடியாது. 12இப்பொழுது, நீங்கள் போய் பலிக்கான அப்பொருளை வாங்கி உங்கள் ஆசாரியன் அந்த இடத்தை ஏற்படுத்தி இருக்கும்போது இந்த இளம் வாலிபர் என்ன செய்தார்? கயிற்றை எடுத்து, கோபமடைந்து, மேஜைகளை உதைத்து, ஜனங்களை விரட்டி அடித்தார்? அன்பு? அவர்களைக் கோபமாகப் பார்ப்பது? இதை நீங்கள் ஆவியின் கனிகள் என்று கூறுகின்றீர்களா, பாருங்கள். மனிதன் யெகோவாவை ஆராதிக்க இருக்கும் வாய்ப்பை இழக்கச் செய்வது! வணிகர் அவரை ஆராதிக்க வேண்டும் என விரும்பினர். அவர்களால் ஆடுகளை வளர்க்க இயலாது, ஆதலால் அங்கு சென்று வாங்கினார்கள். இவரோ அவைகளைக் கவிழ்த்து, உதைத்து, வெளியே துரத்தினார். யார் அங்கே ஆவிக்குரிய கனிகளை கொண்டுள்ளது? பாருங்கள்? இதோ, கவனியுங்கள். ஆவிக்குரிய கனிகள், அந்நிய பாஷைகளில் பேசுவது அல்ல, சத்தம் போடுவது அல்ல. 13சகோ. பிரான்ஹாமே, அதற்கான சாட்சி எங்கே? என்று நீங்கள் கேட்கலாம். அது அந்த மணி நேரத்தின் வார்த்தையானது உறுதிப்படுத்தப்படுதலாகும். அவர்கள் வேதத்தை வைத்திருந்தார்கள். யெகோவா என்ன நடக்கும் என்று கூறியிருந்தாரோ அவ்விதமாகவே அவர் இருந்தார். அதற்கு எந்த வியாக்கியானமும் தேவை இல்லை. அது அங்கே வியாக்கியானிக்கப்பட்டிருந்தது. உங்கள் ஆசாரியர்கள் எல்லாவற்றையும் பெற்றிருந்தார்கள். காரியங்கள் சரியாக சம்பவித்துக் கொண்டிருந்தன. ஆனாலும் அவர்கள் வார்த்தையை காணத் தவறினார்கள். வார்த்தையானது அந்த காலத்திற்கென ஜீவிக்கும்படி அவர் செய்தார். அதுதான் அந்த காலத்தின் அத்தாட்சி ஆகும். லூத்தர் அவர் காலத்திற்கேற்ற சாட்சியைப் பெற்றிருந்தார். அவ்வாறே வெஸ்லியும், பெந்தெகோஸ்தேயினரும் உடையவர்களாயிருந்தனர். ஆனால் நாம் மற்றொரு காலத்தில் உள்ளோம். அவைகளெல்லாம் சரியானது தான். ஒரு குழந்தைக்கு விரல், கண், காது உள்ளது. பிறகு அது ஒரு மனிதப் பிறவியாக வந்து பிறந்து ஆத்துமா, சரீரம், ஆவியையுடைதாயிருந்து அசைய வேண்டும். 14இப்பொழுது இவையெல்லாவற்றைக் காட்டிலும் சிலவற்றில் தான் இயேசு தம்மை பிரகடனப்படுத்தினார். ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் தான் அவரைக் கண்டனர். பெரிய, காய்பாவைச் சேர்ந்த கூட்டம் அல்ல. காய்பா ஒரு முழு தேசத்தையே ஒன்றாகக் கூட்ட முடியும். இயேசுவோ சில பேர்களைத் தான் கூட்டினார். அவர் பூமியின் மீது வந்ததை ஆயிரமாயிரம் பேர் அறியமுடியவில்லை. அவர் பூமி முழுவதும் சென்றார். ஆனால் அவர் அங்கிருக்கிறார் என்று கூட அவர்கள் அறியவில்லை. மறுபடியும் அப்படியே செய்தார்கள்! ஜீவனுக்கென்று அழைக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்களிடத்தில் தான் அவர் வருவார். எவர்கள் ஜீவனுக்கென்று அழைக்கப்பட்டவர்கள் என்பது அவருக்குத் தெரியும். அவர்களைப் பார்த்துக் கொள்வது அவருடைய வேலை. 15இப்பொழுது கவனியுங்கள் இவர்கள் (மார்த்தாள், மரியாள், லாசரு - தமிழாக்கியோன்) அவரை விசுவாசித்து சபையை விட்டுவெளியே வந்தவர்களாய் இருந்தனர். அவரைக் குறித்த எல்லாவற்றையும் வார்த்தையானது கூறியிருந்தது. அவர் அங்கிருந்தார். இவர்கள் வீட்டை விட்டு ஒரு நாள் அவர் வெளியில் சென்றார். மூன்று விதமான காரியங்களை குறித்து உங்களிடம் நான் பேசவிருக்கிறேன்: இயேசு அவர்களை விட்டுச் சென்றார்; மரணம் வந்தது; எல்லா நம்பிக்கையும் அற்றுப் போனது. இந்த மூன்று காரியங்களைக் குறித்து சில நிமிடங்கள்நான் பேச விரும்புகிறேன். இயேசு அவ்விடத்தை விட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகு வியாகுலமானது உட்பிரவேசித்தது. இப்பொழுது அவர் உன்னையோ அல்லது நீ வசிக்கும் உன் வீட்டையோ விட்டுச் சென்ற பிறகு துன்பமானது வழியில் வந்து கொண்டிருக்கிறது. இயேசுவானவர் சென்ற பிறகு சாத்தானிற்கு திறந்த வாசல் கிடைக்கின்றது. அவர் சென்றுவிட்டார். அவர் சென்றுவிட்டப் பிறகு மரணம் உட்பிரவேசித்தது. இயேசு வெளியில் சென்றால் மரணம் உள்ளே பிரவேசிக்கும். அவரிடமிருந்து பிரிக்கப்படுதல் என்றால் அது மரணமாகும். ஆகையால் இயேசு வெளியில் சென்ற பிறகு மரணம் உள்ளே வந்தது. 16மரணமானது லாசருவைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. லாசருவிற்காக வந்து ஜெபிக்க, தாங்கள் விசுவாசித்து, நேசித்த அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். ஏனென்றால் அவர் தேவன் என்று அவரைக் கண்டும் அறிந்தும் இருந்தார்கள். மார்த்தாள், நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்கு தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்'' என்று அதை வெளிப்படையாகக் கூறினாள். அவரும் தேவனும் ஒன்றாயிருக்கிறார்களென்றும் அவர் அந்த மணி நேரத்தின் வார்த்தை என்றும் அறிந்துக் கொண்டாள். அவரைத் தொடர்பு கொண்டால் போதும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அவரோ சென்றுவிட்டிருந்தார். அவரை கண்டுபிடிக்க அவர்களால் இயலவில்லை. அவரிடம் ஆள் அனுப்பின போது, அவர் வருவதற்கு பதிலாக, தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். மறுபடியும் ஆள் அனுப்பினபோதும் வருவதற்கு பதிலாக இன்னும் தூரமாகச் சென்று கொண்டிருந்தார். சில நேரங்களில் ஏன் இப்படி சம்பவிக்கின்றது என்று நாம் எண்ணலாம். ஆனால் வேதாகமமானது “தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும்'' என்று கூறுகின்றதல்லவா? தான் செய்கிறது என்னவென்பது அவருக்குத் தெரியும். அவர் தாமதித்தாலும் அது பரவாயில்லை. அதற்கு ஒரு நோக்கம் உண்டு. தான் செய்வது என்னவென்பதை அவர் அறிந்திருந்தார். 17''மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்ய குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்“ என்று பரிசுத்த யோவான் 5:19-ல் அவர் கூறுவதைநாம் காண்கிறோம். பிதாவானவர், அவர் சென்றுவிட வேண்டுமென்றும், இவ்வளவு நாட்கள் அப்புறம் இருக்க வேண்டுமென்றும் கூறி இருந்தார். அந்த நாட்கள் முடிந்த பின்பு, “நம்முடைய சிநேகிதன் லாசரு நித்திரையடைந்திருக்கிறான்'' என்றார். பிறகு, ”அது நல்லதற்கே“ என்றார். ''நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்'' என்று கூறினார். ஏனெனில் அவனை (லாசருவை - தமிழாக்கியோன்) சுகப்படுத்துவதற்கு அல்லது என்ன செய்யப்பட வேண்டும் என்று கூறுவதற்கு அவரை கண்டுபிடிக்க முயன்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்ன செய்யப்பட வேண்டுமென்று அவர் அறிந்திருந்தார். அவர் (இயேசு - தமிழாக்கியோன்) என்ன செய்ய வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருந்ததோ அதைச் செய்தார். அதாவது, பின் தங்கிவிடுதல். அவர் கல்லறையண்டை வந்தபோது கவனியுங்கள். அவர் மறுபடியுமாக இந்த வீட்டிற்கு திரும்பவும் வந்தடைந்தபோது அதை தெளிவாக வெளிப்படுத்தினார். 18எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனது. லாசரு மரித்துப் போனான். ''அவர் காட்சியில் இடைபடலாம், அவர் திரும்ப வருவார்'' என்று ஒவ்வொரு மணி நேரமும் இவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர். கடைசியில் லாசருவின் மூச்சு நின்றது. அவன் மரித்தான். ஆகையால் அவர்கள் அவன் சரீரத்திலிருந்து ரத்தத்தை எடுத்து விட்டு பிறகு அதை (லாசருவின் சரீரத்தை - தமிழாக்கியோன்) ஒரு துணியினாலும், நறுமண சாக்கு வகையினாலும் சுற்றி கல்லறையில் வைத்து அந்நாட்களின் முறைமையின்படி அதை ஒரு கல்லினால் மூடினார்கள். பூமியில் அல்லது பாறையில் ஒரு சிறிய குழியை வைத்து அதின் மேல் கல்லால் மூடுதல் அவர்கள் பழக்கமாய் இருந்தது. முதலாம் நாள் கடந்தது. இரண்டாம், மூன்றாம், நான்காம் நாட்களும் கடந்தன. அந்த மனிதன் கல்லரையில் அழுகிக் கொண்டிருந்தான். அநேகமாக அவனுடைய மூக்கானது அழுகி உள்ளே விழுந்திருக்கலாம். முதலாவதாக மூக்கு தான் அழுகி உள்ளே விழும் என்று நான் நினைக்கிறேன். பிறகு அவன் அழுகிக் கொண்டிருந்தான். அவனுடைய மாம்சமானது பூமியின் தூளிற்கு சென்று கொண்டிருந்தது. ஆத்துமா அவனிடத்திலிருந்து நான்கு நாள் பிரயாணமாக எங்கோ சென்றிருந்தது. இவ்வாழ்க்கையில் அவனைத் திரும்பவும் காண முடியும் என்ற நம்பிக்கை முற்றிலுமாக அற்றுப் போனது. முதலாம் நாள் அல்லது இரண்டாம் நாளாவது அவர் வருவார் என்று அவர்கள் காத்திருந்தனர்!வரவில்லை. அவன் மரித்தான். அதன் பிறகும் அவர் வரவில்லை. பிறகு எல்லோருக்குள்ளும் பதறல் குடி கொண்டது. 19சிறிது நேரம் கழித்து போதகர் வெளியில் வந்திருக்கிறார் என்று யாராவது சொல்லியிருக்கக் கூடும். உடனே மார்த்தாள் எழுந்து தெருவில் ஓடினாள். எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிருந்த அந்த இருள் சூழ்ந்த வேளையில்தான் இயேசு வந்தார். அந்நேரத்தில்தான் அவர் எப்போதும் வருபவர். பாருங்கள்? அந்த இருண்ட வேளையில் இயேசுவானவர் காட்சியில் தோன்றுகிறார். இப்பொழுது கவனியுங்கள். அவர் வந்து மார்த்தாளை அழைக்கிறார். அவருடைய பிரசன்னமானது புது நம்பிக்கையை அளிக்கிறது. அவன் மரித்துப் போயிருந்த போதிலும் பரவாயில்லை. ஆனாலும் அவருடைய பிரசன்னமானது புதிய நம்பிக்கையை கொண்டு வருகிறது. 20என் நண்பனே, புற்று நோய், இருதய நோய் இருப்பதால் மருத்துவர்கள் கைவிட்டுவிட்ட நிலையில் இன்றிரவு இங்கு அமர்ந்திருக்கலாம். ஒரு வேளை நீ முடவனாய், நாற்காலியில் இருக்கலாம். எல்லா விஞ்ஞானமும் நீ தேறுவாய் என்ற நம்பிக்கையே இல்லை என்று கூறலாம். கால்ஷியமானது உன் எலும்புகளில் சேர்ந்துவிட்டிருப்பதால் அதை உன்னால் இயக்க முடியாமல் போகலாம். அல்லது உன் இருதயமானது மோசமான நிலையில் இருக்கலாம். நீ எந்த நிமிடத்தில் மரிப்பாய் என்று மருத்துவர் கூறலாம். ஓ, காச நோய், புற்று நோய் உள்ள அநேக மக்களுக்கு இது ஒருவேளை ஒரு கடைசி வாய்ப்பாக இருக்கலாம். மருத்துவர் உங்களை திருப்பி அனுப்பியிருக்கலாம். ஆனாலும் அவருடைய சமூகத்தில் இருப்பதும், இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னம் இருப்பதையும் நீ அடையாளம் கண்டுகொண்டால், அது உனக்கு நம்பிக்கையை திரும்பவும் அளிக்கும். 21சிலர் அதற்கு (வியாதிக்கு - தமிழாக்கியோன்) நீ முன்பு எப்போதும் அறியாத பெயரை இடலாம். ஆனால் ஒருவர் அங்கு ஒரு சபை உள்ளது என்று எனக்குத் தெரியும். “அவர்கள் தேவனில் விசுவாசம் வைத்து வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறார்கள்'' என்று கூறினால் (நீ மரணத் தருவாயிலிருந்து அதற்கு ஆயத்தமாயிருந்தாலும்) பாருங்கள், உங்களுக்கு புதிய நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கிறது. அந்த இருள் சூழ்ந்த வேளையில் யாராவது அதைப் பற்றி அல்லது இயேசுவைப் பற்றி உனக்கு கூறும் போது அது அப்படித்தான் ஆகும். (புதிய நம்பிக்கை துளிர்விடும் - தமிழாக்கியோன்) அவருடைய பிரசன்னம் புதிய நம்பிக்கையைக் கொண்டு வரும். சென்ற இரவு நாம் கண்டது போல, உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையானது எந்த ஒரு சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்பட்டு 1900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, கல்வாரியிலே மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து, சீஷர்களுக்கு காட்சி அளித்து, அவர்கள் கண்களைத் திறந்து, இந்நாளுக்கான வாக்குத்தத்தத்தை அளித்த அந்த இயேசுவானவர் இப்பொழுது இன்றிரவு நம்முடைய மத்தியில் உள்ளார் என்பதை நிரூபித்தது. அதே காரியத்தை அதுதாமே இன்றிரவு செய்யட்டும். அது மக்களுக்கு நம்பிக்கையை கொண்டு வர கடமைப்பட்டுள்ளது. புதிய நம்பிக்கை பிரகாசிக்கத் துவங்குகிறது. 22யாராவது சிலர் ''சபையானது சிறிது காலமாக வறண்ட நிலையில் உள்ளது. நமக்கு சில மாதங்களாக நல்ல புதிய தண்ணீர் கிடைப்பதில்லை. நாம் எழுப்புதலையும் அடையவில்லை. எல்லோரும் ஒரு தேக்க நிலையை அல்லது வேறெதையோ அடைந்துள்ளனர். நாம் சபைக்கு மாத்திரம் சென்று ஒரு பாடலைப் பாடிசில செய்திகளைக் கேட்டு பிறகு திரும்புகிறோம்'' என்று கூறலாம். நாம் வறண்ட நிலையை அடையும் பட்சத்தில் திடீரென்று இயேசு காட்சியில் வந்து நம்மை உயிர்ப்பித்து நமக்கு புதிதான ஒன்றைத் தருகிறார். அதைச் செய்ய அவர் அங்கு எப்போதும் உள்ளார். இயேசு உள்ளே வரும்போது புதிய நம்பிக்கையும் உள்ளே வருகின்றது. அவருடைய பிரசன்னம் புதிய நம்பிக்கையை கொண்டு வரும். அவள் (மார்த்தாள் - தமிழாக்கியோன்) அக்காலத்தைக் கண்டு அவர் தான் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருந்தார் என்று அறிந்திருந்தாள். அல்லவென்றால் அவள் இன்னுமாய் கோட்பாடுகளில் உறுதியாகவும், சபையைச் சார்ந்தவளாயும் இருந்திருப்பாள். ஆனால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த வார்த்தையை அவர் வெளிப்படுத்தினார் என்றும், அவரே அந்த ஜீவிக்கிற வார்த்தையென்றும் அவள் கண்டு அறிந்தும் இருந்தாள். அவள் அதைப்பற்றி கேட்டபோது, எவ்வளவு பேர் அவளை விமர்சித்த போதும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை, அவருக்காக என்னவெல்லாம் செய்ய பிரயாசித்தாளோ அதையெல்லாம், கடினமாகச் செயல்பட்டுச் செய்தாள் பாருங்கள்? அவர் அந்த வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை என்பதை அவள் அறிந்திருந்தாள். 23எலியாவின் நாட்களின் கதைகளை அவள் படித்திருப்பாள் என்பதில் சந்தேகமே இல்லை. இப்பொழுது, அந்த நாளின் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக அவன் இருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசி, தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியிடம் வரும். அங்கு ஒரு ஸ்திரீ இருந்தாள். அந்த தீர்க்கதரிசி அவளை ஆசீர்வதித்ததின் மூலம் கிடைக்கப் பெற்ற ஒரு குழந்தையை உடையவளாய் அவள் இருந்தாள். ஒரு நாள் அவன் தன் தகப்பனோடு வயலில் இருந்தபொழுது, பதினொன்று மணியளவில், அவனைச் சூரிய வெப்பம் தாக்கியிருக்கலாம் (sunstroke). வேதாகமம் அவ்வாறு கூறவில்லை. ஆனால் அவன் என் தலைநோகிறது, என் தலைநோகிறது என்று அழ ஆரம்பித்தான். சுமார் பகல் பதினொன்று மணி அளவு இருக்கும். அப்பொழுது அவன் தகப்பன் தன் வேலைக்காரனை வைத்து அவனை வீட்டிற்கு கொண்டு போகச் செய்தான். அவன் தன் தாயின் மடிமேல் பிற்பகல் மட்டும் இருந்து, இன்னுமாய் நோய்வாய்ப்பட்டு மரித்துப் போனான். 24அப்பொழுது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அவளைத் தனியேவிடாமல், வந்து அழுது புலம்பிச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் நிதானம் பொருந்திய அந்தத் தாய் தன் இறந்த குழந்தையை எடுத்து, அந்தத் தீர்க்கதரிசிக்கு தான் கட்டிக் கொடுத்த அந்த சிறிய மேலறையிலே அவனுடைய (தீர்க்கதரிசியினுடைய - தமிழாக்கியோன்) கட்டிலின் மேல் வைத்தாள். பிறகு கழுதையின் மேல் சேணம் வைத்து ஏற்றி தன் வேலைக்காரனை நோக்கி: ''இதை ஓட்டிக் கொண்டு போ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே“ என்று கூறினாள். ஓ, என்னே! அதுதான்! இது விவாதிப்பதற்கும், குழப்பிக் கொண்டிருப்பதற்கும் சமயமல்ல. அந்த நாளைக் கடந்து வேறோரு நாள் இது. நாம் சென்று கொண்டே இருப்போம். நமக்கு ஒரு தேவை உள்ளது. நாம் அங்கு சென்றடைய வேண்டும். “முன்னே சென்று கொண்டே இரு. நான் கட்டளை இடும் வரை ஓட்டத்தை நிறுத்தாதே'' என்று கூறி, எலியாவிடம் சென்றடையும் வரை அவர்கள் பிரயாணம் செய்தனர். எலியா தேவனுடைய மனிதனாய் இருந்தான். கிறிஸ்துவைப் போல் அல்ல; ஏனெனில் கிறிஸ்து எல்லாவற்றையும் அறிவார். ஏனென்றால் அவர் தேவன். எலியா தேவனுடைய ஒரு பாகமாக இருந்தான். அதுதான் எலியாவிற்குள் கிறிஸ்து. அதுதான் அந்நேரத்தின் செய்தியாய் இருந்தது, அந்த மணி நேரத்திற்குரிய தேவனுடைய வார்த்தையானது அந்த தீர்க்கதரிசியிடம் இருந்தது. இயேசு, எல்லாத் தீர்க்கதரிசிகளின் முழுமையாக இருந்தார். எல்லோரும் (தீர்க்கதரிசிகள் - தமிழாக்கியோன்) அவரைத்தான் வெளிப்படுத்தினார்கள். அதுதான். யோசேப்பு முதல், முப்பது வெள்ளிக் காசிலிருந்து, எவ்விடத்திலும் கிறிஸ்து பிரதிபலிக்கப்பட்டார். மோசேயும் அவ்வாறே செய்தான்! 25புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக தாவீது மலையின் மேல் உட்கார்ந்து அழுதான். 800 ஆண்டுகள் கழித்து தாவீதின் குமாரன் மலையின் மீது அமர்ந்தார். அதுதான் தாவீதிற்குள்ளிருந்த கிறிஸ்துவின் ஆவி. அவர் தாவீதின் வேரும் சந்ததியுமாயிருந்தார். ஆதலால் புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக ''எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்க்கும் விதமாக உன்னை எத்தனை தரம் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்'' என்று கதறினார். அது என்ன? அது மறுபடியுமாக கிறிஸ்து அங்கே இருப்பதாகும். தாவீது சங்கீதத்தை எழுதின போது அங்கே கதறியது கிறிஸ்து தான். ''என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம். அவர்கள் என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப் போடுகிறார்கள். அதுதான் கிறிஸ்து தாவீதிற்குள்ளிருந்து பேசுவது. அது சரி. அவர் தான் வார்த்தையின் வெளிப்பாடாக இருந்தவர். தீர்க்கதரிசிகள் உரைத்த எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்காகத்தான் கிறிஸ்து வந்தார். ஏனென்றால் வார்த்தையானது தீர்க்கதரிசிகளிடம் இருந்தது. கடந்த இரவு வேத பாடத்தில் நாம் பார்த்தது போல அவரைக் குறித்து தீர்க்கதரிசிகள் உரைத்தயாவையும் நிறைவேற்றுவதற்காகவே அவர் வந்தார். ஏனென்றால் அவர்கள் வார்த்தையை உடையவர்களாக இருந்தனர். எலியா தேவனுடைய தீர்க்கதரிசியாகவும் அந்நாளிற்குரிய வார்த்தையாகவும் இருந்தான். 26அந்த தீர்க்கதரிசி வந்து தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்தும், வரை சூனேமித்திய ஸ்திரீயானவள் தீர்க்கதரிசியுடனே தரித்திருந்தாள். பிறகு அவன் வந்து பிள்ளையின் மேல் படுத்தபோது அது உயிரடைந்தது. மார்த்தாள் வீட்டு வேலைகளிலும் பாத்திரங் கழுவுதலிலும் மற்றும் அநேக காரியங்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போதிலும் இச்சம்பவங்களை அவள் அறிந்திருப்பாள். ஆனால் இங்குதான் தன் நிறத்தை, முழு தன்மையை வெளிப்படுத்தினாள். அவளுக்குள் என்ன இருந்தது என்பதைக் காண்பித்தாள். அவரிடம் அவள் உடனே சென்றாள். எலியாவிற்குள் தேவன் இருப்பாரானால், கிறிஸ்துவிற்குள்ளும் அவர் இருந்தாக வேண்டும். ஏனென்றால் அவர்தான் அந்த நபர் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆமென். அத்தகைய தீர்மானித்தல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் தான் அவள் சென்றாக வேண்டும். இப்பொழுது கவனியுங்கள். அவர் ஒருபோதும் மாறாதவர் என்று அவள் அறிவாள். தேவன் நமது திட்டத்தை ஒரு போதும் மாற்றுவதில்லை. அவர் எலியாவிற்குள்ளிருந்து மரித்தவரை உயிரோடெழுப்புவாரானால், அவ்வாறு இன்னும் (லாசருவை எழுப்புவது - தமிழாக்கியோன்) செய்யவில்லையென்றாலும் கிறிஸ்துவிற்குள்ளிருந்து மரித்தவரை உயிரோடெழுப்ப வேண்டும். ஏனென்றால் அவர் தேவன். ஆதலால் அவள் அவரிடம் சென்று அவரை அங்கு கண்டடைகின்றாள். 27இன்னும் அவர் மாறாதவராயிருக்கிறார்! முன்பு இருந்தது போல் இன்றிரவும் தேவன் உள்ளார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் மாறுவது கிடையாது. அது அவருக்குள் இருந்தது என்பது அவளுக்கு தெரியும். கவனியுங்கள். அடுத்த சில நிமிடங்களுக்குள் அது நிரூபிக்கப்பட்டது. தன் சகோதரனைக் குறித்து அவரிடம் கூறின போது அவள் “ஆண்டவரே நீர்... என்று விசுவாசிக்கிறேன்'' என்று என்றாள். அவர் ''நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். நானே மோசேயோடு கூட எரிந்து கொண்டிருந்த முட்புதரில் இருந்தவர் நானே. ''நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். நான் தான் அந்த மதில். நான் அப்படியே இருக்கிறவர்“ அவர் தான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை; தீர்க்கதரிசியாக இருப்பதால் அவர் பொய்யுரைக்க முடியாது என்னும் மகத்தான உறுதியை அவள் பெற்றாள். ”இருக்கிறவராகவே இருக்கிறேன், உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் நானிருக்கிறேன்'' 28அவள், ''உலகத்தில் வருகிறவராகிய தேவகுமாரன் நீர் தான் என்று நான் விசுவாசிக்கிறேன். என் சகோதரன் மரித்து கல்லறையில் இருக்கிறான். அவனுடைய உடல் இப்பொழுது அழுகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இப்பொழுதும் கூட நீர் என்ன கூறினாலும் அது அப்படியே ஆகும்'' என்று கூறினாள். சரி! அவர் என்ன கூறப் போகிறார் என்பதைக் கேட்கவே அவள் வாஞ்சித்தாள்! ஆமென். ஒ, மார்த்தாள், இன்றிரவு நாம் எங்குள்ளோம்? ''ஒரு வார்த்தை மாத்திரம் கூறும் அப்பொழுது என் வேலைக்காரன் பிழைப்பான்'' அவர் கூறுவதை மாத்திரம் கேள்! அவர் அவ்வாறு பேசியுள்ளார் என்பதை அவளுக்கு அறிவித்திருப்பார்கள். அவர் இங்கேயே தாமாகவே இருந்தார். ஓ தேவனே, குருடான கண்களை திறந்தருளும் அவர்கள் காணும்படியாக! அவருடைய பிரசன்னத்தில் அவர் வார்த்தையை பேசினால், அது அப்படியே உறுதிப்படுத்தப்படும். ''நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்!“ அதை மட்டும் நான் கேட்கட்டும், என்று கூறினாள். அவர் வார்த்தையை பேச வேண்டும் என்று அவள் விரும்பினாள். நான் அதைச் செய்வேன் என்று அவர் உரைப்பதை மாத்திரமே அவள் கேட்க விரும்பினாள். 29அதை அவர் அப்பொழுதே செய்திருக்கக் கூடும். ஆனால் பாருங்கள், பிதாவானவர் அவருக்கு காண்பித்த தரிசனத்தின்படி அவர் கல்லறையண்டையில் நிற்க வேண்டும் என்பதே. ஓ, என்னே! உன் விசுவாசத்தில் நிலைத்திரு. தேவன் எல்லாவற்றையும் சரியாக நடப்பித்துக் கொண்டு வருகிறார். எல்லாம் சரியாக அமைந்திருக்கும். அவர் கல்லறையண்டையில் செல்லுமட்டும் சற்று பொறுத்திரு. எல்லா நம்பிக்கையும் அற்றுப்போன வேளையில்; அவன் மரித்து கல்லரையில் அழுகிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் வந்து அதைப் பேச வேண்டும் என்று மாத்திரமே அவள் விரும்பினாள் என்பதை கவனியுங்கள். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்'' என்று அவர் கூறினபோது அவள் அதை விசுவாசித்தாள். இப்பொழுது கவனியுங்கள். நடக்கக் கூடாத, இயலாத காரியங்களை அவள் விசுவாசித்தாக வேண்டும். ”நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்'' என்று கூறி, “இதை விசுவாசிக்கிறாயா?'' என்று கேட்டார். அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவ குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறினாள். எனக்கு அது பிடிக்கும். எனக்கு அது பிரியம். 30இதை நான் உங்களுக்கு ஏற்கனவே கூறியுள்ளேன். இதைக் கூறுவது இப்பொழுது சரியாக இருக்கும். சில நாட்களுக்கு முன்பாக ஒரு ஸ்திரீயுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவளுடைய சபையானது அவர் ஒரு சாதாரண மனிதனென்றும், தீர்க்கதரிசி என்றும் கூறி, அவர் தேவன் என்பதையும், அவருடைய தெய்வத் தன்மையையும் விசுவாசிக்காத ஒன்று என்று ஏற்கனவே உங்களிடம் கூறியிருக்கின்றேன். உண்மையாக அவர் தேவனுக்கும் ஒரு படி கூடுதலானவர், பாருங்கள், வெளிப்பட்டவர் அவரே. இயேசு ஒரு சரீரமாகவும், ஒரு சிறுவனாகவும், ஒரு மனிதனாகவும் இருந்தவர். தேவன் அவருக்குள் வாசம் செய்தார். தேவன் அவருக்குள் இருந்தார். அவர் தேவ - மனிதனாக இருந்தார். அவர் மனிதனாக இருந்தார். ஆனாலும் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். நாம் இயேசுவைக் காணும்போது தேவனையும் காண்கிறோம். ''என்னைக் காணும்போது பிதாவைக் காண்கிறீர்கள்'' என்று அவர் கூறியுள்ளார். அவர் பிரதிபலிப்பவராக இருந்தார். ஏனென்றால் ஆதியில் இருந்த வார்த்தையாக அவர் இருந்தார். ஆமென். 31அவர் தீர்க்கதரிசிகளை ''தேவன்“ என்று அழைத்தார். உங்களுக்கு அது தெரியுமா? ”தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களை 'தேவன்' என்று அவர் சொல்லியிருக்க, நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?'' என்று கூறினார். ஏனென்றால், அதே வார்த்தையானது அவர் அங்கிருப்பார் என்று உரைத்தது. வார்த்தையானது மறுபடியுமாக வெளிப்பட்டது. ஆனாலும் இன்னும் அவர்களால் விசுவாசிக்க கூடவில்லை. இந்த ஸ்திரீ என்னிடம் ''அதை (அவர் மனிதனென்று - தமிழாக்கியோன்) உங்களுக்கு என்னால் நிரூபிக்க முடியும்'' என்று கூறினாள். ''நீங்கள் பிரசங்கிப்பதை நான் விரும்பிக் கேட்கிறேன். ஆனால் ஒரு காரியத்தை மிகைப்படுத்துகிறீர்கள் என்று கூறினாள். ''நல்லது, அது என்ன?“ ''நீர் இயேசுவை பற்றி ஜம்பப்பேச்சு (brag) பேசுகிறீர் என்றாள்''. “அதற்கெதிராய் நீ கூறினது அவ்வளவுதானா. எனக்கு பத்தாயிரம் நாவுகள் இருந்தாலும் அவரைப் புகழ்ந்து பேச இயலவில்லை. இதைக் குறித்துதான் அவர் என் மேல் குற்றங்கண்டு பிடிக்க முடியும்'' என்றேன். ”ஓ, என்னே, அவர் எப்பேற்பட்டவர்“ என்றேன். ''ஆனாலும் நீர் அவரை தேவனாக்குகிறீர்'' என்றாள். “ஆம் அவர் தேவன். இல்லாவிட்டால் உலகத்திலேயே அவர் சிறந்த ஒரு ஏமாற்றுக்காரர்'' என்று கூறினேன். அதற்கு அவள், “அவர் ஒரு தீர்க்கதரிசி'' என்றாள். நான் கூறினேன், “அவர் தீர்க்கதரிசிதான்,'' அது உண்மை அவர் தேவன் - தீர்க்கதரிசி, வார்த்தையின் முழுமை. ஒரு தீர்க்கதரிசிக்கு தேவனுடைய வார்த்தை வரும் - அதுதான் அவனை தீர்க்கதரிசி ஆக்குகிறது. ஆனால் அவரோ அந்த வார்த்தையின் முழுமையாக இருந்தார். ''உமக்கு என்னால் அதை நிரூபிக்க முடியும்“ ”நீர் அவரை தெய்வத்தன்மை கொண்டவராகச் செய்கிறீர்'' என்று அவள் கூறினாள். ''அவர் தெய்வத்தன்மை கொண்டவர்'' என்று கூறினேன். அவளோ “அவர் தெய்வத்தன்மை கொண்டவராக இருக்க முடியாது'' என்றாள். ''அவர் அதை கொண்டவர்“ என்றேன். ''நீர் வேதத்தை விசுவாசிப்பதாக கூறுகிறீர் அல்லவா'' என்றாள். “நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறினேன். 32“உம்முடைய வேதத்தைக் கொண்டே அவர் தெய்வத் தன்மை அற்றவர் என்பதை நிரூபிப்பேன்” என்று அவள் கூறினாள். “அப்படியே செய். வேதாகமம் அவ்வாறு கூறினால் அதை நான் விசுவாசிப்பேன், ஏனென்றால் வார்த்தையானது பிம்ஓயற்றது என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்றேன். “பரிசுத்த யோவான் 11-ஆம் அதிகாரத்தில் லாசருவின் கல்லறைக்கு செல்லும் வழியில் நடந்ததை நினைவிற் கொண்டுள்ளீரா?'' என்றாள். ''நிச்சயமாக அம்மணி'' என்றேன். கல்லறைக்குச் செல்லும் பாதையில் அவர் அழுதார். வேதம் “அவர் கண்ணீர்விட்டார்'' என்று கூறுகிறதே என்றாள். நிச்சயமாக, “அவர் கண்ணீர்விட்டார் என்றே வேதம் கூறுகிறது'' என்றேன். “எப்படி அவர் தெய்வத் தன்மையை உடையவராக இருந்து அழ முடியும்?'' என்றாள். ''அவர் மனிதத் தன்மையுடையவர்“ என்றேன். “மனிதத் தன்மையும், தெய்வத் தன்மையுமா?'' நான் கூறினேன். ''ஆம், ஸ்திரீயே, நீ அதைக் காணத் தவறுகிறாய். அவர் அழுகிறவர்களோடு அழுது கொண்டும், துக்கித்துக் கொண்டிருந்தவர்களோடு துக்கித்துக் கொண்டும் சென்ற ஒரு மனிதன். ஆனால் தன் சிறிய மெலிந்த தேகத்தை உயர்த்தி லாசருவே வெளியே வா“ என்று கூறினபோது ”நான்கு நாட்களாக மரித்துக் கிடந்த ஒரு மனிதன் காலூன்றி நின்றான். அது மனிதனிலும் மேலான ஒன்று. அது மனிதனுக்குள்ளிருந்த தேவன்“ செத்த ஒரு மனிதனையார் எழுப்பக் கூடும், தேவன் தானே? அவர் தாமே உயிர்தெழுதலும் ஜீவனுமானவர்! அதுசரி. 33அன்றொரு இரவு கடலில் சோர்வுற்றவராக படகில் படுத்துக் கொண்டிருந்த போது, பத்தாயிரம் பிசாசுகள் அன்றிரவு அவரை மூழ்க்கடிக்க வேண்டும் என்று சபதம் எடுத்தன. அச்சிறிய படகானது கொந்தளித்துக் கொண்டிருந்த கடலிலே ஒரு பாட்டில் மூடியை போன்று அங்கும் இங்குமாய் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, “அவரைப் பிடித்துவிட்டோம், அவர் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார் அந்த முழு கூட்டத்தையுமே மூழ்கடித்துவிடலாம்'' என்று பிசாசுகள் எண்ணின. ஓ, அவர் மனிதனாக சோர்வுற்றிருந்தார். ஆனால் அவர் எழுந்து கப்பற் பாயின் நுனிக்கயிற்றின் (brail) மேல் தன் காலை வைத்து கடலைப் பார்த்து இரையாதே, அமைதலாயிரு” என்று கூறினார். பிறகு காற்றும் அலைகளும் அவருக்கு கீழப்படிந்தன. அது மனிதனிலும் மேலான ஒன்றாகும். அவர் பசியாயிருந்தபோது ஒரு மனிதனாக, மலையை விட்டு கீழிறங்கி வந்து சாப்பிட ஒரு ரொட்டித் துண்டோ அல்லது வேறெதாவதோ, அல்லது அத்தி மரத்தில் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐந்தாயிரம் பேர்களை போஷித்தபோது, அது மனிதனுக்குள்ளிருந்த தேவன். அது சரி. 34ஒரு பீன்ஸ் மலையைப் போலிருந்த எல்லா மனிதரும் அதை விசுவாசித்தனர். எல்லாக் கவிஞர்களும் விசுவாசித்தனர். ஒருவர் எழுதுகிறார்: வாழ்ந்தபோது என்னை நேசித்தார், மரித்த போது என்னை இரட்சித்தார் புதைக்கப்பட்ட போது, என் பாவங்களை தூர கொண்டு சென்றார்; உயிர்த்தெழுந்தபோது தாராளமாக என்றென்றுமாக என்னை நீதிமானாக்கினார். ஒரு நாள் அவர் வரப் போகின்றார், ஒ மகத்தான நாள் எட்டி பெரோனெட் (Eddie Perronet) அவருடைய பாடல்கள் விற்காத போது, ஒரு நாள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் நிறைவால் தள்ளாடிய போது ஒரு பேனாவை எடுத்து தொடக்கப் பாடலை எழுதினார். இயேசுவின் நாமத்தின் வல்லமையை எல்லோரும் போற்றுவோம்! தூதர்களும் விழுந்து பணியட்டும்; ராஜரீக மகுடத்தை கொண்டுவந்து, எல்லாவற்றிற்கும் தேவனாக முடி சூட்டுவோம்! அல்லேலூயா! நிச்சயமாக அவர் அவ்வாறு தான் என்று நாம் விசுவாசிக்கிறோம். ஆம் ஐயா. 35இப்பொழுது அவள் அக்கால நவீனமன யோசனைக்கு எதிராக நடக்க இயலாத காரியங்களை விசுவாசித்தாக வேண்டும். புதிய ஜீவனைக் காண வேண்டுமென்றால், ஒரு காரியம் நடப்பிக்கப்படுவதைக் காண வேண்டுமென்றால் நீயும் நடக்க இயலாத, முடியாத காரியங்களை விசுவாசித்துதான் ஆக வேண்டும். ஆனால் அவர் வார்த்தை என்பதை அவள் அடையாளம் கண்டு கொண்டாள். அதன் பிறகு நடக்க இயலாத காரியங்கள் நடந்தேறும். ஏனெனில் அவர் சிருஷஷ்டிகர். தாம் உரைத்த ஒவ்வொன்றிற்குப் பின்னாலும் அவர் உள்ளார். ''விசுவாசிக்கிறவர்களால் எல்லாம் கூடும்“ அது அவருடைய வார்த்தை. தேவனுடைய வார்த்தையை எடுக்கும் போது நடக்க இயலாத காரியங்கள் வெளிப்படுகின்றன. ஆம் ஐயா, தேவன், அப்படியே ஆகும் என்று கூறுகின்றபோது அவ்வார்த்தையை அப்படியே எடுத்து நடக்க இயலாத காரியங்கள் நடப்பிக்கப்படுவதைப் பார். அது நிச்சயமாக நடந்தேறும். அச்க்ஷணத்திலும், “அவள் இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்கு தந்தருளுவார்” என்று கூறினாள் என்பதை கவனியுங்கள். அவரிடமிருந்து புறப்பட்டு வரப்போகின்ற அந்த வார்த்தையை தான் பெறப்போகிறோம் என்று அவள் அறிந்திருந்தாள். அவள் செய்ய வேண்டியது அது மாத்திரமே, அந்த வார்த்தையை பெற்றுக் கொள்ளுதல். ஆம் அதுதான்அவளுடைய இருண்ட நேரமாக இருந்தது. அதன்பின் இயேசு வந்து அழைத்தார். ஓ, அவர்கள் கண்டது என்ன, ஒரு உயிர்த்தெழுதல்! இருண்ட நேரங்கள் வந்த இன்னும் சில காலங்களையும், காரியங்களையும் இப்போது நாம் பார்ப்போம். 36யோபு என பெயரிடப்பட்ட ஒரு மனிதன் ஒரு காலத்தில் வாழ்ந்தான். வேதத்தில் உள்ள பழைய தீர்க்கதரிசிகளில் அவனும் ஒருவன். அவன் ஒரு மகத்தான மனிதன். அவன் கர்த்தரை நேசித்து, தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சரியாகச் செய்தான். ஆதலால் சாத்தான் அவனை அரித்தெடுக்க ஆசை கொண்டான். ஒரு நாள் அவன் தேவனிடம்... இல்லை தேவன் அவனைப் பார்த்து சாத்தானே, ''நீ எங்கிருந்து வருகிறாய்? என்றார்“. ''பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன்'' என்று கூறினான். ''என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை'' என்று கூறினார். “ஓ, அவனுக்கு எல்லாவற்றையும் அளிக்கிறீர், எல்லாவற்றையும் செய்கிறீர். நிச்சயமாக அவன் சிறந்த மனிதன் தான். ஆனால் ஒரு விசை மாத்திரம் என் கைக்குள் வரட்டும். அவன் போக்கையே மாற்றிவிடுகிறேன், உம் முகத்துக்கு எதிரே உம்மை தூஷிக்கச் செய்கிறேன்” என்று கூறினான். அதற்கு அவர் ''உன்னால் முடியாது'' என்றார். அதுதான் அவர் ஒரு விசுவாசியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையாகும். ஏன்? அவர் முடிவில்லாதவர், நித்தியமானவர். துவக்கமுதல் முடிவுவரை அவர் அறிந்திருக்கிறார். சாத்தானால் அதைச் செய்ய முடியாதென்பதை அவர் அறிந்திருந்தார். ஏனெனில் அவர்தான் வார்த்தை. யோபு என்ன செய்யப் போகிறான் என்பது அவருக்குத் தெரியும். 37இப்பொழுது யோபை நினைவில் கொள்ளுங்கள். அவன் (சாத்தான் - தமிழாக்கியோன்) அவனை பருக்களால் வாதித்தான், அவன் பிள்ளைகளைக் கொன்றான். அவனுக்கிருந்த எல்லாவற்றையும் எடுத்துப் போட்டான். அவனுடைய ஆஸ்தி போயிற்று, அவனைத் தேற்ற வந்தவர்களும் ஒன்றும் செய்யமுடியாமல் அவனை ஒரு இரகசிய பாவி என்று குற்றஞ் சுமத்தினர். இந்த வயதான யோபு ஒரு இடுக்கமான சூழ் நிலையை அடைந்தான். நீ முதலாவது இடுக்கத்திற்குள்ளாகச் செல்லுதல் வேண்டும். பாதையின் முடிவை அடைந்துவிட்டோம் என்கின்ற நேரத்திற்கு நீ வந்தாக வேண்டும். யோபு தன் பாதையின் முடிவை அடைந்து, ''நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக, சூரியன் பிரகாசிக்காமல் இருப்பதாக. இரவில் சந்திரன் பிரகாசியாமல் இருப்பதாக,'' என்று கூறினான். அந்த இடுக்கமான சூழ்நிலையில், அச்சமயத்தில் இயேசு வந்தார். அவன் கீழ் நோக்கி ''ஒரு மனிதனைக் காண்கிறேன், ஒரு பூ மரித்து வசந்த காலத்தில் உயிரடைகிறது. ஒரு மரம் உதிர்ந்து போனாலும் தண்ணீரின் வாசனையால் அது மறுபடியும் துளிர்விடும் என்றான். ''தாவர இனத்தைச் சேர்ந்த எல்லாம் மறுபடியுமாக உயிர் வாழ்வதை அவன் கண்டு, “ஒரு மனுஷன் படுத்துக்கிடக்கிறான், மனுபுத்திரன் ஜீவித்துப் போனபின் அவன் எங்கே?'' என்று கூறுகிறான். அவன் வயதான ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ''அவன் பிள்ளைகள் வந்து அவனுக்காக துக்கித்தாலும் அதை அவன் காணமுடியாது. ஓ நீர் என்னை பாதாளத்தில் ஒளித்து உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, எனக்கு ஒரு காலத்தை குறித்தருளும். நாம் சென்று...'' என்று கூறுகிறான். பிறகு அவன் இப்படி பேசிக் கொண்டே போகிறான். அவன் முடிவில் துயரத்தில் இருந்தான். “என்ன நடக்கும்? மரத்தில் இலைகள், பூக்கள் மறுபடியுமாக துளிர்த்து ஜீவிக்கின்றன, மற்றவைகளும் வருகின்றன. ஆனால் மனுஷனோ கீழேபடுத்து ஜீவித்துப் போகிறான்!'' அவன் துயரத்தில் இருந்தான். அந்த வயதில் அவனுக்கு என்ன ஆகப் போகின்றது என்று அவன் அறியாதிருந்தான். 38அவன் அவ்வாறிருந்தபோது, அதன்பின் இயேசு வந்தார். தேவன் அவன் தலையை வானத்திற்கு ஏறெடுத்துப் பார்க்கும்படி செய்தார். கடைசி நாட்களில் இயேசு வருவதை அவன் கண்டான். அந்த இருண்ட வேளையில் “தேவனை தூஷித்து ஜீவனை விடும்'' என்று அவன் மனைவி கூறின போதிலும் அவன் நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், ”கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்“ என்றான். அவனுடைய மனைவியும், அவனுடைய சபையும், இன்னும் ஏனையோரும் அவனைப் புறக்கணித்தனர். தான் எங்கு செல்கிறோம் என்று அவன் அறியாதிருந்த அந்த இருண்ட நேரத்தில் அவ்வழியில் இயேசு வந்தார். அதன் பிறகு அவன் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும் அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். தோல் புழுக்கள் (Skin worms) இச்சரீரத்தை அழித்தாலும், ”நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்'' என்றான். அவனுடைய இருண்ட மணி நேரத்திலே, அதன்பின் இயேசு வந்தார். ஆம் ஐயா. 39இஸ்ரவேலிலே மோசேக்கு இருண்ட நேரமானது வந்தது. அவன் தேவனுடைய பணியின் பாதையில் செம்மையாகச் சென்றான். முட்செடியிலே தேவன் அவனைச் சந்தித்து நான் இருக்கிறவராக இருக்கிறேன்'' என்றார். யந்நேயும் யம்பிரேயும் அவனுடைய காரியங்களை போலியாக நடப்பித்துக் காண்பித்துக் கொண்டிருந்தபோது அவன் அதினூடாகச் சென்றான். இவை எல்லாவற்றிலும் அவன் தேவனுக்காக உண்மையாக நின்று, கடைசியாக இஸ்ரவேலர் எல்லாரும் விசுவாசிக்கும்படி செய்தான். இதோ அவன் எகிப்தை விட்டு வெளி வந்து, ''நீங்கள் இந்த மலையின் மேல் என்னை ஆராதிப்பீர்கள்“ என்று தேவன் கூறின அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குச் சென்று கொண்டிருந்தான். அதுதான் தேவனுடைய வார்த்தை. அந்த மலைக்குத்தான் செல்லவேண்டும் என்பதை மோசே அறிந்திருந்தான். ஆமென்! தேவன் அவ்வாறு கூறியிருந்தார். எந்த பார்வோனாலும் அவனை கொல்ல முடியாது. எந்த பிசாசாலும் அவனைக் கொல்ல இயலாது. எதுவும் அவனைக் கொல்ல முடியாது. அவன் அந்த மலைக்கு வருகிறான். ஆமென்! அல்லேலூயா! நான் பக்திவசப்படுகிறேன். அந்த மலைக்கு அவன் செல்கிறான். அவ்வாறே நாமும் மகிமைக்குச் செல்லும் பாதையில் இருக்கிறோம்! ஒன்றும் நம்மை நிறுத்த முடியாது. இல்லை ஐயா! தேவன் தம்முடைய வார்த்தையை உறுதிபடுத்தப் போகிறார். என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எவ்வாறாயினும் அவர் அதைச் செய்வார். 40அவன் தன் பாதையில் சென்று கொண்டிருக்கிறான், சேவையின் பாதையில் செம்மையாகச் சென்று கொண்டிருக்கிறான். இங்கே அவன் மலைகளின் மத்தியில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் தன் பின்னேயிருந்து வருகின்ற இரைச்சலைக் கேட்கின்றான். அது என்ன? ஈட்டிகளோடும், ஆயுதங்களோடும் அவர்களை நசுக்க வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பார்வோனின் ரதங்கள். அங்கேயோ சிவந்த சமுத்திரம் அவன் பாதையை தடுத்திருந்தது. அவன் என்ன செய்தான்? அவன் ஒரு இடுக்கமான சூழ்நிலையை அடைந்தான். ஜனங்களும் “ஓ, நாம் இதில் சிக்கிக் கொண்டோம். பார்வோன் தனது பட்டயத்தாலே நம்மை உருவாக்குத்தி நம்மை கொன்று போடுவான். நமது குழந்தைகள் இங்கே வனாந்தரத்திலே சாகுமே,'' என்று கதறினார்கள். “ஓ தேவனே” என்று மோசே கதறினான். அதன் பின் இயேசு காட்சியில் வந்தார். அவர் தான் அக்கினி ஸ்தம்பம். அது சரி. அவர் கீழே இறங்கி ஆபத்திற்கும், அவனுக்கும் நடுவில் வந்து நின்றார். ஆமென். நமக்கு இடைப்படுகின்ற தேவன் அவரே. அவர் தாமே நமக்கும் சத்துருவிற்கும் நடுவில் நிற்பவர். ஆமென், ஒரு மத்தியஸ்தர். அங்கே அவர் நின்றார்; ஏதாவது செய்ய வேண்டும் என்று வந்து கொண்டிருந்த எகிப்தியர்க்கு அது இருளாயிருந்தது. அவர் கூட நடப்பவர்களுக்கோ அவர் ஒளியாய் இருந்தார். பிறகு காலையில் காற்றானது பலமாய் வீசத் துவங்கியது, அந்த இரவில் அவர் என்ன செய்தார்? அக்கினி ஸ்தம்ப உருவில் அங்கு வந்திருந்தார். 41அதே அக்கினி ஸ்தம்பமாய் அவர் இன்னுமாய் இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆம் ஐயா. அவர் பூமியில் இருந்தபோது “நான் தேவனிடத்திலிருந்து வந்தபடியால் நான் தேவனிடத்திற்கு செல்லுகிறேன்'' என்று கூறினார். அவர் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிரடைந்து மேலே எடுக்கப்பட்ட பிறகு: பரிசுத்த பவுல் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் அந்த அக்கினி ஸ்தம்பத்தால் அடிக்கப்பட்டான். அவன் ஒரு எபிரேயன் என்று ஞாபகங் கொள்ளுங்கள். இல்லையெனில் இவ்வாறு கூறியிருக்கமாட்டான். ''ஆண்டவரே, நீர் யார்?” என்று கூறினான். பெரிய (ஆங்கிலத்தில் - தமிழாக்கியோன்) எழுத்து (LORD) ஏலோஹிம். “நான் துன்பப்படுத்துகின்ற நீவிர் யார்?'' அவர் கூறினார் ''நான் இயேசு'' ஆமென்! அல்லேலூயா! துவக்கமும், முடிவும்; எல்லாமும் அவரே. இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள், நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் இருப்பேன்'' என்று - தான் செய்த அதே வாக்குத்தத்தத்தின் மூலம் காரியங்களை நடப்பித்து, ஆமென் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தும் அதே தேவன், அதே அக்கினி ஸ்தம்பம் அவரே. ''நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். இருந்தவரும், இருக்கிறவரும், வரப் போகிறவரும் நானே'' ஆம். ஐயா, ஆம். ''எங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்'', ''அவர்களெல்லாரும் மரித்தார்கள். ஆனால் நான் இருக்கிறவராக இருக்கிறவர்'' என்று கூறினார். மோசே... எரிகின்ற முட்செடியிலே இருந்தவர். அந்த இருக்கிறவராக இருக்கிறவர். அவர் இன்னும் அதே இருக்கிறவராக இருக்கிறவர். இருந்தவர் அல்ல, இருக்கிறவர். நிகழ்காலம், எல்லா நேரத்திலும். 42மோசே பின்னுக்கு அந்த மூலையில் தள்ளப்பட்ட பின்னர், கிறிஸ்து கீழிறங்கி வந்தார் என்று இங்கே நாம் பார்க்கலாம். இப்பொழுது வேதம் எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்'' என்று கூறுகின்றது. கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தை தேவனிடமிருந்து வெளியில் சென்ற அந்த அபிஷேகம் தான் கிறிஸ்து, லோகாஸ். அந்த தூதன், வேதத்தை படிப்பவர் எவரும் அத்தூதன் கிறிஸ்துதான் என்பதை அறிவர். பிறகு அங்கே அந்த வனாந்திரத்தில் இருந்து, காட்சியில் தோன்றி, தேவனுடைய மகிமை வெளிப்படுவதற்காக அவ்வடிவத்தில் வந்தார். அதே கிறிஸ்து, தம்மை வெளிப்படுத்தி, அந்த வடிவத்தில் இன்றைக்கு வந்திருக்கிறார். அவர்களை வெளியே கொண்டு வருவேன் என்று அவர்களுக்கு கூறியிருந்தார். அதை அவர் செய்து கொண்டிருந்தார். தன் வார்த்தைக்காக நிற்க, உறுதிபடுத்த அங்கே அவர் வந்தார். அதன் பிறகு அவர் வந்தார். மார்த்தாளுக்குச் செய்தது போல-அதன்பின் வந்து அழைத்து, “மோசே நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டு போங்கள் என்று இம்மக்களுக்கு சொல்லு'' என்று கூறினார். அந்த இருண்ட வேளையில், சிவந்த சமுத்திரம் திறந்து வழி வகுத்தது, அவர்கள் அதைக் கடந்து தேவனுடைய வார்த்தை நிறைவேறத் தக்கதாக தங்கள் பிரயாணத்தில் சென்றார்கள். ஆம். மோசேயினுடைய இருண்ட வேளையில், அப்பொழுது இயேசு வந்தார். இப்பொழுது நமக்கு நேரமுள்ளது. அவர் மோசேயை அழைத்து. 43இன்னும் ஒரு சிறிய மனிதனைக் குறித்து உங்களது கவனத்தைக் கவர நாங்கள் விரும்புகிறோம். அவனுடைய பெயர் யவீரு ஆகும். இவனைப் போன்ற அநேகர் இன்று உலகத்தில் உள்ளனர். இவன் ஒரு ரகசிய விசுவாசியாவான். இவன் இயேசுவை நேசித்து, அவரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை விசுவாசித்தான். ஆனால், நீங்கள் கவனியுங்கள். அவன் ஏற்கனவே ஒரு ஸ்தாபனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தவன் ஆவான். ஆமாம் அவன் வந்து... அவன் வெளியே வந்து அறிக்கை செய்ய முடியாதவனாய் இருந்தான். அவன் அதை விசுவாசித்தான். ஆனால் அவனால் அதை அறிக்கை செய்ய முடியவில்லை... ஆதலால் அவன் அவிசுவாசிகளுடன் பிணைத்தவனாய் இருந்தான். ஆனாலும் அதை உண்மையாக விசுவாசித்தான். ஒரு மனிதன் அவ்விதமான நிலையில் இருந்தால் - தேவன் அவனை பலப்பரிட்சைக்கு கொண்டு வருவார் என்பது உங்களுக்கு தெரியுமா. இடுக்கமான சூழ்நிலையில் தான் நாம் உண்மையாகவே எப்படிப்பட்டவர் என்பதையும், நம் நிறத்தையும் வெளிப்படுத்துவோம். ஆகையால் அவன் ஏற்கனவே அவிசுவாசிகளுடன் சேர்ந்து அங்கு சென்று தன் பெயரை புத்தகத்தில் பதித்து, இன்னும் அநேக காரியங்களை செய்தவனாய் இருந்தான். அவன் ஒரு ஜெப ஆலயத்தலைவனாய் இருந்தபடியால் அவனால் அறிக்கை செய்ய இயலவில்லை, ஏனெனில் அது அவனுடைய சாப்பாட்டு சீட்டாக (meal ticket) இருந்தது. ஆனாலும் அவன் இன்னுமாய் இயேசுவை விசுவாசித்தான். 44ஒரு நாள் அவனுடைய சிறு குமாரத்தி நோயுற்றாள். ஓ, என்னே, அப்படிப்பட்ட மனிதன் ஒரு மருத்துவரை அழைத்திருப்பான் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த மருத்துவர் வந்து பிள்ளையைப் பார்த்தார். ஆனாலும் காய்ச்சலானது இன்னும் மோசமடைந்து, அவளுக்கு இன்னுமாய் வெப்பம் அதிகரித்து, மற்ற எல்லாம் ஆகி, முடிவில் அவள் மரணத் தருவாயை அடைந்தாள். அவன் இடுக்கத்திற்குள்ளானான். அவன் ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. ''அவர் எங்கிருந்தாலும் அவரை கண்டு பிடிப்பேனானால்'' என்று இப்பொழுது அவன் யோசித்தான். ஒரு தனிப்பட்ட நேர்காணலுக்காக (Private interview) நிக்கொதேமு செய்தது போல ஒரு இரவு நேரத்திற்கு அவன் காத்திருக்கவில்லை. அது செயல்படுவதற்கான நேரமாயிருந்தது. அதற்கான நேரம் வந்துவிட்டது. ஆதலால் அவன் செயல்பட்டாக வேண்டும். சகோதர சகோதரிகளே, அதேபோன்று தான் இன்றும் என்று நான் நினைக்கின்றேன். செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஒன்று, விசுவாசிக்க வேண்டும் அல்லது விசுவாசிக்கக் கூடாது என்னும் நேரம் வந்துள்ளது. அந்த பிரிக்கும் கோடானது ஒவ்வொரு மனிதனுக்கும், ஸ்திரீக்கும், குழந்தைக்கும் வருகின்றதாயிருக்கிறது. சில சமயங்களில் அக்கோட்டை நீ கடப்பாயானால் ஒன்றுதான் மீதமுள்ளது. அது நியாயத்தீர்ப்பு. நீ இரக்கத்திற்கும் நியாயத்தீர்ப்புக்கும் நடுவே செல்வாயானால், நீ அக்கோட்டைக் கடப்பாயானால் அதுதான் நியாயத்தீர்ப்பு. 45அவன் இக்கட்டிற்குள்ளானான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. அங்கே அவனுடைய ஆசாரியர்களும், ரபிக்களும், ஐக்கியத்தாரும் அவனைச் சூழ்ந்து நின்று அவனுடைய சிறு குமாரத்தி மரித்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மருத்துவரும் வெளியில் கையை மடக்கிக் கொண்டும், பிசைந்துக் கொண்டும் ''எனக்குத் தெரிந்த எல்லா மருந்துகளையும் கொடுத்தேன். ஆனாலும்...'' என்று நின்று கொண்டிருந்தார். கவனி, அந்த எல்லா க்ஷன நேரத்திலும் இயேசுவானவர் வேலை செய்து கொண்டிருந்தார். இச்சிறிய மனிதனிலிருக்கும் நிறத்தை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இயேசு இதை நடப்பித்துக் கொண்டிருந்தார். இன்னும் சிறிது நேரம் கழித்து அவன் தன் ஆசாரிய அங்கியையும் சிறிய கறுப்புத் தொப்பியையும் அணிந்து கொள்வதை என்னால் காண முடிகிறது. ''எங்கே செல்கின்றாய்?'' ''அங்கு நதியினண்டை இருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டேன். ஆதலால் அவரை நாடிச் செல்கிறேன்''. ஓ, என்னே! அவன் சென்றான்! 46அந்த ஒரு துயரமான வேளையில் அவன் ஒரு முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. அவன், குழந்தையை இறந்துபோக விடவேண்டும்; அல்லது அது வார்த்தையினுடைய வெளிப்பாடு என்று அவன் அறிய வேண்டும். அவன் ஒரு ஜெப ஆலயத் தலைவன். அவன் வார்த்தையை படித்திருந்தபடியால் அது தேவனுடைய வெளிப்படுத்தல் என்றும், தேவன் கிறிஸ்துவிற்குள் இருந்து உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கியுள்ளார் என்றும் அவன் அறிந்திருந்தான். ஒன்று, அவன் தவறிழைத்து தன் குழந்தையை மரித்துப்போக விடவேண்டும் அல்லது தன்னுடைய அறிக்கையை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு அவன் தள்ளப்பட்டான். அவன் இடுக்கத்திற்குள்ளான அதே நேரத்தில்தான் இயேசு அப்பக்கமாக வந்தார். அவன் அவரைக் காணச் சென்று அவரிடம், ''நீர் என்ன சொல்கிறீரோ அதன்படியே உம்மோடே நடப்பேன்'' என்றான். தான் அவரை விசுவாசிக்கிறவன் என்ற தன்னுடைய அறிக்கையை பொது மக்களின் பார்வையில் செய்து, தன்னைத்தானே எல்லாச் சபைத் தொடர்புகளிலிருந்தும் விலக்கிக் கொண்டான். பிறகு ஒரு தூதுவன், காப்பாளன் அங்கு வந்து கொண்டிருந்தான். 47அத்தூதுவன் வந்து யாரையும் வருத்தப்படுத்தாதீர், “ஏனெனில் உம் குமாரத்தி ஏற்கனவே மரித்துப் போனாள். அவள் நேற்று மரித்தாள். ஆகையால் முட்டாள் தனமான காரியங்களைச் செய்யாதீர்'' என்றான். பிறகு, ஓ அவனுடைய சிறு இருதயமானது நிற்கும் தருவாயிலிருந்தது. ஆனால் அவர், ''நான் உனக்குச் சொன்னேன் அல்லவா? நீ தேவனுடைய மகிமையைக் காண வேண்டுமென்றால் பயங்கொள்ளாதே. எதற்காக நீ பயப்படுகிறாய்? நான் செல்வேன் என்று ஏற்கனவே உன்னிடம் கூறியுள்ளேனே'' என்று கூறின இயேசுவினுடைய கண்களை கண்டு நோக்கினவனாய் இருந்தான். தான் வருவதாக ஏற்கனவே சொல்லியிருந்தார். இதைச் செய்யப் போவதாக முன் கூட்டியே அவர் கூறியிருந்தார். இப்பொழுது இங்கு அவர் செய்து கொண்டிருக்கிறார். ஆமென். கடந்த இரவு நாம் வாசித்து தியானித்தது போல் கடைசி நாட்களில் அவர் காட்சியில் தோன்றி இக்காரியங்களைச் செய்வார் என்று அவர் கூறினார். இங்கே அவர் செய்து கொண்டிருக்கிறார். எதற்காக நீ பயப்படுகிறாய்? பிறகு அவர் காட்சியில் வந்து மரித்துப் போயிருந்த அவளை உயிரோடெழுப்பினார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். வயது சென்ற குருடனான பர்திமேயு ஒரு சமயம் தன் இருண்ட நேரத்தை சென்றடைந்தான். 48இயேசுவானவர் எரிகோவில் ஒழுங்கு செய்யப்பட்ட முழு சுவிசேஷ வியாபாரிகள் மக்களின் காலை உணவு கூட்டத்தில் இருந்தார். அங்கிருக்கும் ஒரு வீதியில் ஒரு மரத்திலிருந்த சகேயுவை சந்தித்தார். அவனால் எதுவும் ஏற்பாடு செய்ய இயலவில்லை என்று நான் நிச்சயிக்கிறேன். பாருங்கள்? ஆதலால் அவர் அங்கு வந்து, அவனை அடைந்த போது சகேயு அவருடன் சென்றான். வயதான பர்திமேயு சிறுவனாய் இருந்த முதற்கொண்டு குருடனாக இருந்தவன். ஆதலால் இயேசு அந்த வாசலின் வழியாய் வெளியே வருவார் என்று எண்ணி காத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ஒரு பெருஞ் சத்தத்தையும், எல்லோரும் வருகிறதையும் கேட்டான். அப்போது, ஒரு ஆசாரியன் ''ஏய், நீ அங்கு மலையின் மீது போகப் போகிறாயா? நீ மரித்தோரை உயிரோடெழுப்புகிறாய் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். நீ ஒரு மேசியாவாயிருந்தால் இங்கு வந்து எங்கள் கல்லறையில் நிறைந்து உள்ள மரித்தோர் எல்லோரையும் உயிரோடெழுப்பு பார்க்கலாம்'' என்று கூறினதை அவன் கேட்டான். அதே பிசாசுதான் இன்றும் மதம் என்ற வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதே போன்று தான் பாருங்கள்? “நீ ஒரு மேசியாவாயிருந்தால், நாங்கள்... நீ மரித்தவரை எழுப்புகிறாய்; இங்கு எங்களுக்கு ஒரு கல்லறை முழுவதும் உள்ளனர், வா” ஓ, எல்லோரும் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். “தீர்க்கதரிசிக்கு ஓசன்னா” என்று ஒரு கூட்டமும், வேறொன்று இது, அது என்றும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். என்ன ஒரு குழப்பம்! இந்த வயதான குருடன் நினைத்தான், “ஓ அவரை சந்திக்கும் வாய்ப்பை தவறவிட்டேனே, அவர் இவ்வழியாய் வருவார் என்று எண்ணினேன்; ஆனால் அங்கு இருக்கும் வழியில் வந்துவிட்டார் போலும். என்னை தவறான இடத்தில் உட்கார வைத்துவிட்டார்களே'' ''அவர் வார்த்தையாயிருந்தாரானால், அவர் தேவன்; அவர் அப்படித்தான் இருக்க வேண்டும்,'' என்று எண்ணி ”ஓ இயேசுவே, தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்,'' என்று உரத்த சத்தமாய் கூப்பிட ஆரம்பித்தான். அந்த இடுக்கமான நேரத்திலே அவன் கூப்பிட்டான். 49இங்கு நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் அப்பொழுது இயேசு எரிகோவில் இருந்தார். இயேசு இருந்த இடத்திலிருந்து அவன் நூற்று ஐம்பது கெஜம் தூர இருந்தான். ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சூழ்ந்திருந்த வேளையில் அந்த மனிதனின் சத்தத்தை அவரால் கேட்டிருக்க முடியாது.இல்லை. ஆனால் அவர் அதை உணர்ந்தார், நின்றார். ஓ, “அதன் பின் இயேசு நின்றார்” என்ற தலைப்பில் வருகின்ற ஏதாவது ஒரு இரவில் பேச விரும்புகிறேன். அதன் பின் இயேசு குனிந்தார், ''ஓ, இயேசு நின்றபோது என்ன ஆயிற்று? அவனை அழைத்தார். சீஷர்கள் போதகர் வந்திருக்கிறார் கவலையுறாதே, உன்னை அழைக்கிறார்'' என்றனர். அக்கூட்டத்திலிருந்து அவனை அழைத்தார். அவர் அதே காரியத்தை இப்பொழுது செய்கிறார். சரியாகப் பொருந்துகிறதா? பாருங்கள்? “போதகர் வந்திருக்கிறார் உன்னை அழைக்கிறார் குருட்டுத் தனத்திலிருந்து வெளிச்சத்திற்கு, இருளிலிருந்து ஒளிக்கு அழைக்கிறார், அவனை அழைத்தார், மரணத்திலிருந்து ஜீவனுக்குள் வந்தான். ''போதகர் வந்திருக்கிறார் உன்னை அழைக்கிறார். அவர் அவனை அழைத்த போது அவனுக்கு மறுபடியும் பார்வை அளித்தார். 50ஒரு சமயத்தில் மலையின் மேல் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ இருந்தாள். அவள் தன் பணத்தையெல்லாம் வைத்தியர்களுக்கு செலவு செய்தாள். அவள் எல்லாவற்றையும் விற்றாள் என்பதில் சந்தேகமே இல்லை. தன் நிலத்தை விற்றாள், அடகு வைத்தாள். வைத்தியர்களுக்காக எல்லாவற்றையும் செலவழித்தாள். ஆனால் அவர்களால் அவளுக்கு எந்த ஒரு நன்மையும் செய்ய முடியவில்லை. இன்னுமாய் அவள் மோசமடைந்து கொண்டே இருந்தாள். இரத்தப்பெருக்கானது நிற்கவில்லை. அவள் நிலைமை இன்னும் மோசமடைந்தது. ஒரு நாள் தான் வசித்து வந்த அந்த மலையின் மேல் உட்கார்ந்து தைத்துக் கொண்டிருக்கையில் கீழிருந்த ஆற்றுப்படுகையில் (Valley) ஒரு படகு வருவதைக் கண்டாள். “தீர்க்கதரிசிக்கு ஓசன்னா” என்று எல்லோரும் சத்தமிட்டுக் கொண்டு ஓடினர். 51அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாள், “விசுவாசம் கேள்வியினால் வரும். நான் கீழே சென்று அவரைப் பார்ப்பேன்” என்று கூறினாள். அவள் நடந்து கீழே சென்று தேவனுடைய வார்த்தை மாம்சத்தில் வெளிப்பட்டுள்ளதை முதலாவதாகக் கண்டாள். அவருடைய பேச்சு, பார்வை அவருக்குள் ஏதோ இருப்பதை குறிக்கிறது. ஆதலால் அது அவர்தான் என்று அறிந்து கொண்டாள். ஆம் ஐயா. ஓ, “நான் அவருடைய கவனத்தை எப்படியாயினும் ஈர்க்க முடியுமானால், நான் எப்படியாவது அவரைத் தொடுவேனானால்...!'' அவள் கூட்டத்தினூடே நழுவிச் சென்று அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவளுடைய விரல்களின் தொடுதலை அவர் உணரவில்லை. இல்லை ஐயா, ஏனென்றால் பாலஸ்தீனிய வஸ்திரமானது மிகவும் தளர்ந்த நிலையில் தொங்கும் (Hanging loose) ஒன்றாயிருந்தது. பிறகு அவர்... அப்பொழுது பேதுரு, ''எல்லோரும் உம்மை தொட்டார்களே,'' என்றான். அதற்கு அவர் “இது ஒரு வித்தியாசமான தொடுதல். நான் தளர்வுற்றதை என்னால் அறிய முடிகிறது'' 52இயேசு வந்திருக்கிறார். அவளுடைய பணம் மற்றும் எல்லாம் போனது. ஆனாலும், இரத்தப் பெருக்கானது நிற்காமல், வைத்தியர்களாலும் நிறுத்த முடியாமல் இருந்த அந்த இருண்ட வேளையில் இயேசு வந்தார். அவர் என்ன செய்தார்? அவளைக் கண்டு பிடிக்கும்வரை, “அவர் சுற்றும் முற்றும் பார்த்து அவளை அழைத்து உனக்கு பெரும்பாடு இருந்தது, அது இப்பொழுது நின்றுபோயிற்று'' என்றார். ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்'' போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார். அவர் வந்து அழைத்தார். அவளை சுகத்திற்கு அழைத்தார். 53கிணற்றண்டையில் இருந்த அந்த சிறிய ஸ்திரீ - அவளைக் குறித்து சென்ற இரவு பேசினோம். அவளுக்கு எல்லா நம்பிக்கையும் அற்றுப் போனது. ஒருவேளை அவளது ஐந்தாவது கணவன் அவளை கைவிட்டு அன்றிரவு தான் ஆறாவதாக ஒருவனைக் கைப்பற்றி இருக்கலாம், அவனைக் குறித்து சிறிது சந்தேகம் கொண்டிருந்தாள். அவள் நெறிதவறின ஒருவளாய் இருந்தாள். அவள் ஒரு உண்மையான பெண்மணியாக இருக்க விரும்பினாள்; அவள் வேதத்தை வாசித்துக் கொண்டிருந்தாள் என்பதில் சந்தேகமே இல்லை. அவள் பதினொரு மணிக்கு அங்கே சென்றாள். அதிகாலையில் நன்னெறியுள்ள பெண்கள் வரும்போது அவளால் வரமுடியவில்லை. அவர்கள் ஜாடிகளில் தண்ணீர் நிரப்பி தங்கள் தலைகளின் மேல் வைத்துச் சென்றார்கள். அவள் வந்து அவர்களோடு கலக்க முடியாது. ஏனெனில் சரியும், தவறும் கலந்து வாழ்வதில்லை. ஆகவே அந்த காலத்தில் அப்படி பிரித்து வைத்திருந்தார்கள். நெறிதவறிய அவளை வர அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே எல்லோரும் தங்கள் தண்ணீரைக் கொண்டு சென்ற பிறகு... அவள் சிறந்த ஒன்றிற்காக வந்தாள். 54பிறகு அங்கே பானையைத் தன் தலையின் மேல் சுமந்து கொண்டு தனியாக அவள் செல்லும்போது இப்படி நினைத்திருப்பாள் என்பதில் சந்தேகமேயில்லை. ''இப்பொழுது கடந்து இரவு நான் கைபிடித்து, விவாகம் செய்த அம்மனிதனை சந்தேகிக்கிறேன். அவன் தமாஷாக நடந்து கொள்கிறான், அவனைக் குறித்து ஒன்றும் தெரியவில்லை. எனக்குக் எந்தத் தருணமும் கிடைக்கவில்லை. நான் சமுதாயத்திலிருந்து புறம்பாக்கப்பட்டவள். அங்கிருக்கும் ஆலயங்களுக்கு என்னால் செல்ல முடியாது. அவர்கள்... மாட்டார்கள், அதை மட்டும் பார்ப்பார்கள்! என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் இடுக்கத்தில் இருக்கிறேன். நான் வேதத்தை படித்து வருகிறேன்; நிச்சயமாக ஒரு நாளில் அத்தீர்க்கதரிசி காட்சியில் வருவார். அப்படி ஒன்றும் இல்லை என்றும் அது ஒருகால் நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் கழித்து நடக்கலாம் என்றும் கூறுகின்றனர். அதற்காக நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்கிறோம். அது இன்னும் நிகழவில்லை. ஆதலால் அதை நாம் இப்போது எதிர் பார்ப்பதில்லை. எல்லாம் அவ்விதமே உள்ள நமக்கு சபைகள் உண்டு. அப்படிப்பட்ட ஒன்று இப்போது நமக்கு தேவையில்லை'' இப்படியாக அவள் சிந்தித்து தனியாக அங்கே சென்று கொண்டிருந்தாள். நீ அவரைக் குறித்து நினைக்கும் போது, அப்பொழுதுதான் அவர் உனக்குத் தோன்றுவார் என்பது உனக்குத் தெரியுமா? கடந்த இரவு நாம் பார்த்தது போல், அவர்கள் எம்மாவூருக்கு சென்று கொண்டிருந்த வேளையில். 55அந்த காரியங்களைக் குறித்து அவள் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், ''தாகத்துக்குத் தா'' என்று ஒரு மனிதன் கூறுவதை அவள் கேட்டாள். இதைக் குறித்து என்ன? அவளுடைய இருள் சூழ்ந்த வேளைகளில், அவள் நெறி தவறினவளாய் இருந்த நேரத்தில், ஒருக்கால் அவள் ஒரு அழகிய சிறிய ஸ்திரீயாக இருந்து, வாழ்வதற்கு அவள் தெருக்களில் செல்ல வேண்டியதாய் இருந்திருக்கலாம். சில சமயங்களில் அது அச்சிறிய பெண்ணின் தவறாயிருக்காது. அவள் வெளியே செல்ல விட்டுவிட்ட அவளது பெற்றோரின் தவறாய் இருந்தது. ஆதலால் அவள் அங்கிருந்தாள், ஒருவேளை அவளது சுருள்முடி இப்படி தொங்கியிருக்கும்; அவள் வெறுமையாய், சோர்வுற்றவளாய், அவளிடத்தில் யாருமே ஒரு தொடர்பும் கொள்ளாதவர்களாய் இருந்த நேரத்தில் அவள் சென்று கொண்டிருந்தாள். அந்த குழந்தை, “ஒருவேளை அதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கலாம். எப்படி இருந்தாலும், அவள் வேதத்தை வாசித்து அதை விசுவாசித்தாள் என்று மாத்திரம் எனக்குத் தெரியும். அங்கு அவளுடைய இருதயத்தில் ஒரு சிறிய வித்து இருந்து அக்காரியம் நடைபெறுமானால் அதை நான்அறிந்து கொள்வேன்'' என்று கூறிக் கொண்டிருந்தது. அவள் அதற்கு முன்குறிக்கப்பட்டிருந்தாள். 56அங்கு நின்று கொண்டு அதைச் செய்வதைப் போல நடித்துக் கொண்டிருக்கும் அந்த வயதான யூதாஸை கவனியுங்கள். அவன் இருதயத்தின் ஆழத்தில் காரிருள் இருந்தது. இங்கு ஒளியானது அவனுடைய கிரியைகளில் பிரகாசித்துக் கொண்டிருந்தது! ஆனால் இருதயத்தின் ஆழத்திலே அவன் அதை விசுவாசிக்கவில்லை. ஆகவே இங்கு இவள்... பாருங்கள், அந்த ஒளி அதன் கீழ் செல்ல முடியவில்லை. அவள் அதை விசுவாசித்தாள். ஆனால் அவளுடைய ஜீவியமானது இருளாயிருந்தது, அந்த ஒளி அவள் மீது விழுந்தபோது, இருளை வெளியே எடுத்தது. ஆனால் இங்கு ஒளியானது பட்டபோது (யுதாஸின் மேல் - தமிழாக்கியோன்) அதை முழுமையாக இருளாக்கியது. அது வித்தியாசம். பாருங்கள். அவள் அந்த நோக்கத்திற்காகவே பிறந்தவள். எத்தனைப் புருஷர்களை அவள் உடையவள் என்பதை அவர் அறிவித்த போது... என்ன நேர்ந்தது? அந்த நேரத்தில் அவள் பரபரப்புற்றாள். அவள் இறுக்கத்திற்குள்ளானாள். “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது இவைகளைச் செய்வார் என்பதை நான் அறிவேன்'' என்றாள். பிறகு அவர் அவளை அழைத்தார். ''உன்னுடனே பேசுகிற நானே அவர்''. அவள் அதை தேவனுடைய வார்த்தையின் மூலம் அடையாளம் கண்டுகொண்டாள். அவர் அவளை தன் பாவங்களிலிருந்து ஜீவனுக்கு அழைத்தார். அவள் பெயர் வேதாகமத்தில் உள்ளது. இன்றைக்கு அவள் சாகாமை வாழ்வை உடையவளாய் இருக்கிறாள். அதே போன்று உன்னை அவரால் அழைக்க முடியும். ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அந்த ஆம், அவள் நெறிதவறினவள், ஆனாலும் அவர் அந்த பகுத்தறிதலை உடையவராய் இருந்தார் என்பது அவளுக்குத் தெரியும். அது மேசியாவாகத்தான் இருக்க வேண்டும் என்று அவள் அறிந்திருந்தாள். “நானே அவர், நானே அவர்'' என்று இயேசு பிறகு கூறினபோது அது அவர்தான் என்று அவள் அறிந்துக் கொண்டாள். 57ஒரு சமயம் சீஷர்கள் படகிலே இருந்தபோது, அவர்களுக்கு எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனது. புயல்... அவர்கள் இயேசு இல்லாமல் சென்றபோது, புயல் ஆரம்பமானது - லாசருவின் வீட்டில் நிகழ்ந்தது போல். எல்லா நம்பிக்கையும் அற்றுப் போனது. அந்த சிறிய பழைய படகானது தண்ணீரினால் நிரம்பிற்று. அவர்கள் கதறிக் கொண்டும், அழுதுக் கொண்டும் இருந்தனர். ஒருவேளை ஜெபித்துக் கொண்டிருக்கலாம், அவர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். மின்னல் அடித்துக் கொண்டிருந்தது. படகில் தண்ணீர் நிரம்பி இருந்தது, பாய் மரத்தண்டுகள் கீழே விழுந்தன, துடுப்புகள் உடைந்துபோயின. அவர்கள் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு அழுதனர். அந்த உண்மையான இருண்ட மணிவேளையில், அதன் பின் இயேசு தனியாக நடந்து வந்தார். அவர் அவர்களுக்கு ஒரு நிழல்போன்ற ரூபத்தில், மங்கலாக ஒரு ஆவியைப் போல் தென்பட்டார். அவர்கள் பயத்தால் அலறினார்கள். இன்றைக்கும் அதுவே சம்பவித்துக் கொண்டிருக்கிறது. இயேசு உன்னுடைய இருண்ட நேரத்தில் வரும்போது நீ அதைக்குறித்து பயமடைகிறாய். அது என்ன என்பதை நீ தெரிந்து கொள்வதில்லை. அது அவர்தான் என்பதை அறியாதவர்களாய் “ஓ அது ஒரு ஆவி'' என்று அலறினர். 58அதன்பின் அவர் அவர்களை அழைத்தார், ''பயப்படாதிருங்கள், நான்தான்'' என்றார். அந்த இருள் சூழ்ந்த வேளையிலே அவர்கள் உதவிக்கு இயேசு வந்தார். அவர் எப்பொழுதும் அப்படித்தான் செய்வார். மிகவும் இருண்ட நேரத்தில் வருவார். பிறகு இயேசு அவர்களிடத்தில் வந்து தம்மை வெளிப்படுத்தினார். பேதுரு “ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின் மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும்'' என்று கூறினான். இயேசு, “வா” என்றார். நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா? கூடிய சீக்கிரத்தில் அவர் இந்த கடைசி நாட்களில் இருப்பவர்களுக்காக வருவார். சபையானது மறுபடியுமாக இருண்ட நேரத்தை அடைந்துள்ளது. ஆச்சரியமாயுள்ளதல்லவா? 59இங்கு ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். இது ஒரு போதகமல்ல. நான் தீர்க்கதரிசனமாகக் கூறுகிறேன். என்ன நிகழ்ந்துள்ளது என்று நீங்கள் அறிவீர்களா? அது சீக்கிரமாக நிகழப்போகின்றது. என்னுடைய வார்த்தையை குறித்து வையுங்கள், எல்லா ஸ்தாபனங்களும் அந்த உலக சபைகளின் ஐக்கியத்தில் (Ecumenical Council) சேரப் போகின்றன. இல்லையெனில் அவர்களுடைய உதவி கிடைக்காது. ஆதலால், புறக்கணிக்கப்படுதல் இருக்கும், பிறகு யாரும் இச்சபைகளுக்கோ அல்லது மற்ற சபைகளுக்கோ செல்லமுடியாது. உன்னுடைய சபையிலிருந்து ஒரு முத்திரையைப் பெற்றாலொழிய நீ வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது. மிருகத்தின் முத்திரை - அது ஏற்கனவே இருந்தது, அது மறுபடியும் வரப் போகின்றது என்பதை நீங்கள் கவனியுங்கள். சபையிலுள்ள ஆவிக்குரிய மக்கள் அதை அறிந்து கொள்வர். பெந்தெகோஸ்தே மக்களாகிய நீங்கள் எப்படியாயினும், இதை அடையாளங்கண்டு, உணர ஆரம்பிக்கிறீர்கள். (பெந்தெகோஸ்தே ஸ்தாபனங்களைச் சேர்ந்த அநேக சபைகள், உங்கள் சபைகள் மாத்திரம்); நான் உங்கள் பெயர்களைக் கூறத் தேவையில்லை. ஆனால் அவைகள் இந்த சமயத்தில் அதற்குள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். தாங்கள் அவ்வாறுதான் என்று இன்னும் சாட்சி கொடுக்கவில்லை. பிறகு நீ அவ்வாறு செய்வாயானால், நீ என்ன செய்ய வேண்டும்? பரிசுத்த ஆவியின் அபிஷேகமாகிய சுவிசேஷ போதகத்தை, வேத போதனையை நீ இழக்க அல்லது விட்டுக் கொடுக்க வேண்டும் அந்த உறுப்பினர்கள் அதற்காக நிற்க போவதில்லை. உண்மையான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் முதலாவதாக மரிப்பார்கள். அவர்கள் வார்த்தையினால் பிறந்தவர்கள். இந்தக் காரியம் வரப் போகின்றதென்று அவர்கள் அறிவார்கள். ஆம், ஐயா. 60இந்த மிகவும் இருண்ட நேரத்தில், அதன் பின் இயேசு வந்து நம்மை அழைத்து ''பயப்படாதே. நான்தான், நான் இன்னும் உன்னுடனே இருக்கிறேன். என்னுடைய வார்த்தையை வெளிப்படுத்த இங்கிருக்கிறேன்'' என்று கூறுவது அதிசயமான ஒரு காரியம் அல்லவா? அன்று எப்படி இருந்தாரோ, அதே போல இன்றும் இருக்கின்றார். அதைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். ஓ என்னே! போதகர் வந்திருக்கிறார், நம்மை அழைக்கிறார். அநேக வியாதியுற்ற மக்கள் இங்கு அமர்ந்துள்ளனர். நம்பிக்கையே இல்லை என்று மருத்துவர் உன்னிடம் கூறியுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. நீ உன்னுடைய, மிகவும் இருண்டுபோய் உள்ள நேரத்தில் இருக்கலாம். ஆனால் ஞாபங்கொள். போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார். 61பிறகு ஒருநாள் போதகர் வந்து ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு பெயரையும் அழைப்பார். உன்னுடையது அங்கில்லையெனில், இப்பொழுதே அது அங்கிருக்க பிரயாசப்படும். ஏனெனில் அவர் வந்து அழைக்க போகிறார். கல்லறையில் உள்ளவர்களும், அவருடைய சத்தத்தைக் கேட்டு உயிரடைவார்கள். போதகர் வந்து உன்னை அழைப்பார். உங்களுக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால், இன்றைக்கு அவர் வந்து அழைக்கையில், பதிலளித்து அந்நாளுக்கென்று ஆயத்தம் செய்யுங்கள். இங்கே இருக்கப் போவதாகவும், அவர் செய்த காரியங்களை மறுபடியும் செய்யப் போவதாகவும் வாக்களித்திருக்கிறார், இந்தகாலத்திற்குரிய வாக்குத்தத்தம். இப்பொழுது மறுபடியும் போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார். 62இன்னும் ஆறு பக்கங்கள் எனக்குள்ளது, ஆனால் அதற்கு இப்பொழுது என்னால் செல்ல இயலாது. நமது தலைகளை வணங்குவோம். நான் சீக்கிரமாக உங்களை விடுவதாக கூறியிருந்தேன். அதற்கு மேலாக பதினைந்து நிமிடங்கள் ஆகிவிட்டது. பரலோகப் பிதாவே, ஓ ஆண்டவரே ''இயேசு வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார்'' என்று நான் கூறிய இக்காரியங்கள் நடந்தேரட்டும். அவர் வரும்போது என்ன செய்கிறார்? அவர் அழைக்கிறார். ஆண்டவரே, அது மறுபடியும் நடந்தேரட்டும். உம்முடைய பரிசுத்த ஆவியின் ரூபத்திலே. ஆண்டவராகிய இயேசு தாமே இன்றிரவு, இம்மக்களின் மத்தியில் வந்து, தன்னை காண்பித்து வெளிப்படுத்தட்டும். அம்மக்கள் எப்படி விசுவாசித்தார்களோ அவ்வாறே நாங்களும் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே. இத்தருணத்தை அடையாத அநேகர் ஒரு வேளை இங்கிருக்கலாம், இங்கு அநேகர் உள்ளனர். நீர் தாமே அதை அருள வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனுடைய நாமத்தின் மகிமைக்கென்று கேட்கிறோம் இயேசுவின் நாமத்தில் ஆமென். 63அதுதான் சகோதரியே, அப்படியே செய்யுங்கள். அது சரி. ஓ... மிகவும் அமைதி, எல்லோரும். அவர் வந்திருக்கிறாரென்று நீ விசுவாசிக்கிறாயா? அவர் வந்துள்ளார். இன்னும் அவர் வரும்போதெல்லாம் அழைக்கின்றாரா? இப்பொழுதும் நீ விசுவாசித்தால் தான். நீ தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தாலே தேவன் அதை அருளுவார். இப்பொழுது பாருங்கள், ஜெப வரிசையை இங்கே அழைப்பதற்கு எனக்கு நேரமில்லை. கர்த்தருக்கு சித்தமானால் அவர்களை இன்றிரவு அங்கே அழைப்பேன். போதகர் வந்திருக்கிறார். இக்கடைசி நாட்களில் தமது வார்த்தையை நிறைவேற்ற வந்திருக்கிறார். அப்பொழுது என்னவாயிருந்தாரோ அவ்வாறே இன்றும் உள்ளார். அன்று அவருடைய அடையாளம் அல்லது வெளிப்படுத்தல் என்னவாயிருந்ததோ, அதேதான் இன்றைக்கும். ஏனென்றால் அவர் இன்னுமாய் தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றார் - ஆசி) தேவனுடைய வார்த்தையானது இருதயத்தின் யோசனைகளையும், எண்ணங்களையும் அறிகின்றதாய் இருக்கிறது. அன்று எவ்வழியாச் செய்தாரோ, அதையேத் தான் எப்போதும் செய்கிறார். அவர் மாறாதவராய் இருக்கிறார். அதைத் தாமே அவர் இப்பொழுது செய்தால் நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? அது, நீ அவரை விசுவாசிக்கச் செய்யுமா? இப்பொழுது இங்கிருக்கும் மக்கள், முதலாவதாக எனக்குத் தெரிந்தவர்கள் யாராவது இங்கு அமர்ந்துள்ளார்களா என்று நான் பார்க்கட்டும். 64இங்கு சுற்றிலும் உள்ள என்னை அறியாத மக்கள் உங்கள் கைகளை உயர்த்துங்கள். உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, பிறகு, நீங்கள் வியாதிப்பட்டிருந்தால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். எல்லோரும் என்று நான் யூகிக்கின்றேன். அது சரி, இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். அதைச் சந்தேகிக்காதீர்கள். தேவனை விசுவாசித்து நம்புங்கள். நீங்கள் அமர்ந்து மிகவும் அமைதியாக இருக்கும்படி நான் உங்களை கேட்டுக் கொள்ளப் போகிறேன். இப்படியும் அப்படியும் செல்லாதீர்கள். தயவு கூர்ந்து அவ்வாறு செய்யாதீர்கள். பாருங்கள்? நீங்கள் ஆத்துமா, சரீரம் ஆவியாக இருக்கிறீர்கள் உங்களுடைய ஆவி... பரிசுத்த ஆவிதாமே மிகவும் சாந்தமான ஒன்று. 65அநேக ஆண்டுகளுக்கு முன்னர், பரிசுத்த ஆவி கூறியதாக நான் இங்கு வரும்போது கூறினதை எத்தனைப் பேர் நினைவில் வைத்துள்ளீர்கள்? நான் மக்களின் கையைப் பிடிக்கும்போது இந்த பகுத்தறிதல் வந்து சொல்லும் என்று அவர் கூறினார். இதை ஞாபகம் வைத்துள்ளீர்களா? அதை நினைவில் கொண்டுள்ளீர்களா? ஆனால் “நீ ஜனங்களை மாத்திரம் விசுவாசிக்கச் செய்வாயானால்'' என்று கூறினார். அநேக நாட்கள், வருடங்களுக்கு முன் என்பதை ஞாபகம் கொள்கிறீர்களா? (சபையார் ”ஆமென்“ என்கின்றனர்) நீங்கள் விசுவாசித்துத்தான் ஆகவேண்டும். ஒரு மனிதனைக் கண்டேன், நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் என்று நான் நம்புகிறேன். சரியாக அந்த இடத்திலே அமர்ந்திருந்தான். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர்... நான் பிரசங்கம் செய்து கொண்டிருந்த நேரத்திலிருந்து அவனை கவனித்து வந்தேன். அவன் முடவனாய், தன் உள்ளங்கைகளில் ஊன்று கட்டைகளை (crutches) வைத்திருந்தான். நான் அழைப்பை ஆரம்பித்தபோது, ஒரு கறுப்பு நிழலாக சாத்தான் அம்மனிதனிடத்திற்கு வந்தான். அதை என் சொந்த கண்களால் கவனித்தேன். அம்மனிதன் எழுந்து வெளியே சென்றான். இனி அவன் எப்பொழுதும் முடவனாயிருப்பான். பாருங்கள். அவன் மட்டும் இருந்திருந்தால் சுகமாக்கப்பட்டிருப்பான், பாருங்கள்? அவன் ஏன் சத்துருவிற்கு செவி சாய்த்தான் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நிழல்கள், ரூபங்கள் எப்படி இருக்கிறதென்றும், எப்படி கிரியை செய்கின்றன என்பதை நீங்கள் மாத்திரம் கண்டால். பாருங்கள் அது அவ்வாறேதான் இருக்கும். 66இப்பொழுது என்னால் சுகமாக்க முடியாது. நான் உன்னை சுகமாக்க முடியும் என்று ஒரு மனிதன் கூறுவானானால் அவன் தவறாயிருக்கிறான். நீங்கள் ஏற்கனவே சுகமாக்கப்பட்டீர்கள். ஆனால் அது இயேசுவின் பிரசன்னத்தை அடையாளங்கண்டு கொள்ளுதல் ஆகும். இப்பொழுது, அவரை மறுபடியும் காணுவேன் என்றும், அவர் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாதலால் தான் விரும்புவதைப் பெற்றுக் கொள்வேன் என்றும் மார்த்தாள் அறிந்துக் கொண்டிருந்தாளானால், அதைப் போன்ற விசுவாசத்தை இன்றிரவில் நம்மால் கொள்ளமுடியாதா? கட்டாயமாக நாம் கொள்ளவேண்டும், நிச்சயமாக. பரிசுத்த ஆவியின் வடிவத்தில் அவர் வந்துள்ளார். அது அவர்தான். இப்பொழுது நீங்கள் ஜெபியுங்கள். இங்கே பாருங்கள், இங்கு என் பக்கத்தில் நான் யாரையாவது நிறுத்தி ஜெபித்துக் கொண்டிருந்தால், கட்டிடம் எங்கும் மக்கள் ஜெபிக்கிறதை கவனித்தேன். நீ அதை கவனிக்க மாத்திரம் செய்ய வேண்டும். ''சகோதரன் பிரான்ஹாமே...'' என்று நீ கூறமுடியாது. இல்லை ஐயா, என்னால் அதைச் செய்ய முடியாது. நீ அதை சொப்பனம் தான் காண முடியும். பாருங்கள்? ஒருவேளை தேவன் என்னைக் குறித்த சொப்பனத்தை உனக்கு அளிக்கலாம், ஆனால் உன் முயற்சியினால் அதைக்காண முடியாது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? “சகோ. பிரான்ஹாமே உம்மைக் குறித்த ஒரு சொப்பனத்தை நான் காணப் போகிறேன்'' என்று உன்னால் கூற முடியாது. இல்லை, அதை உன்னால் செய்ய இயலாது. அதே போல என்னால் ஒரு தரிசனத்தை காண முடியாது. உனக்கு ஒரு சொப்பனத்தை அருளுகின்ற அவர்தான் அதைச் செய்ய முடியும். தரிசனமும் அவ்வாறேதான். 67இந்த வரிசையின் கடைசியில் மூட்டு வீக்கத்தினால் (arthritis) பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் உட்கார்ந்திருப்பதை நான் காண்கிறேன். தன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாரானால் தேவன் அவரை மூட்டு வீக்கத்திலிருந்து சுகமாக்குவார். ஐயா, அவர் செய்வார் என்று நீர் விசுவாசிக்கிறீரா? வரிசையின் கடைசியில் அமர்ந்திருக்கும் அந்த மெக்ஸிக்கோ மனிதன். அதை விசுவாசிக்கிறீரா? அது சரி ஐயா. உமக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த ஸ்திரீக்கும் மூட்டு வீக்கம் (arthritis) உள்ளது. ஸ்திரீயே, தேவன் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? (சத்தம் எதிரொலிக்கிறதா?) மக்களால் அதைக் கேட்க முடியாது என்று நான் அஞ்சுகிறேன் - (ஒலிபெருக்கி அமைப்பை குறித்து தீர்க்கதரிசி கேட்கிறார் - தமிழாக்கியோன்) நீ விசுவாசிக்கிறாயா? அது சரி. அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த மெக்ஸிக்கோ ஸ்திரீயைக் குறித்து என்ன? அவள் வயிற்றுக் கோளாறினால் அவதியுறுகிறாள். ஸ்திரீயே உன் வயிற்றுக் கோளாறை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? அவள் பெற்றுக் கொண்டாள். அந்த ஒளி அங்கு செல்வதை நான் கண்ட மாத்திரத்தில், அப்படியென்றால் அது நடந்தேறியது. அது தான். அது அவளை தொட்டது. அங்குதான் அது சுழன்றது (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி) அது செய்தது பாருங்கள்? அவர் விசுவாசத்தை கண்டாரானால்! பாருங்கள் ''அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை''. 68இங்கு ஒரு ஸ்திரீ அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் பயந்து போய் உள்ளாள். அப்படித்தான், இருக்கவேண்டும். அவளுக்கு புற்று நோய் உள்ளது, மிகவும் மோசமாக உள்ளது. உன்னை எனக்குத் தெரியாது, ஆனால் தேவன் உன்னை அறிவார். இந்தப் புற்று நோயைக் குறித்தோ, அல்லது வேறெதாவதைக் குறித்தோ தேவன் எனக்கு கூற முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? என்னை நோக்கிப் பார். இங்கு அநேகர் ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். நீ பார், அதற்கானகத் தான் கூறுகிறேன். எங்களை நோக்கிப் பார். இப்பொழுது, ஆம், நீ இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல, இது உன் வீடல்ல. நீ கலிபோர்னியாவிலுள்ள போர்ட்வில் என்னும் இடத்திலிருந்து வருகிறாய். அது சரி. நீ யார் என்பதை தேவன் எனக்கு கூறுவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? அவர் அறிவார். உன்னுடைய பெயர் திருமதி விருத்தாம் (wintham). அதுசரி? இப்பொழுது விசுவாசி பிறகு புற்று நோய் உன்னைவிட்டு நீங்கும். உன்னால் விசுவாசிக்கக் கூடாமல் போனால்! அதுதான். நீ அதைச் செய்ய வேண்டுமென்று தேவன் கேட்கிறார். நீ விசுவாசிக்காவிட்டால். உன் முழு இருதயத்தோடும் அதை நீ விசுவாசிக்கின்றாயா? இங்கிருக்கும் இந்த கூட்டத்தில் யாரோ ஒருவர், உன்னால் விசுவாசிக்கக் கூடுமா? போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார். உன்னை மரணத்திலிருந்து ஜீவனுக்கு - வியாதியிலிருந்து சுகத்திற்கு உன்னை அழைக்கிறார். 69இங்கே பின்னாலே அமர்ந்து கொண்டு தலையைக் குனிந்தவாரே ஜெபித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் உள்ளார். உண்மையாகவே அவர் தனக்காக ஜெபிக்கவில்லை, யாரோ ஒருவருக்காக அவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அது ஒரு - ஒரு சிறுமி. அது அவருடைய மகள். அதை விசுவாசிக்கிறீர்களா. ஐயா? உமக்கு கால்களில், முட்டி யில் வேதனை உள்ளது. அதுசரியா. நீர் அழத் தேவையில்லை, உம்மண்டை இருப்பது அவர். உம் மகள் மருத்துவமனையில் உள்ளாள், அவள் தானே? காசநோய் பிரச்சனை. நீர் விசுவாசிக்கின்றீரா? போதகர் வந்திருக்கிறார் அவளை அழைக்கிறார். முற்றிலுமாய் சுகமாக்கப்பட்டவளாய் அவளை காண்பீர் என்று நீர் விசுவாசிக்கிறீரா? விசுவாசிப்பீரா? இவர்தாமே இன்றிரவே அவளிடம் செல்லட்டும், நீர் - அது தாமே முடிந்து போயிருக்கட்டும். பழுப்பு நிறம் கொண்ட முகத்தையுடைய சிறிய பையன் இங்குள்ளான். அவன் தோல் வியாதியினாலும், ஆஸ்துமாவினாலும் அவதியுறுகிறான், சிறிய மெக்ஸிகன் சிறுவன், இங்கு அமர்ந்திருக்கும் சிறிய மெக்ஸிக்க (Mexican) சிறுவன். அவன் அங்கிருந்து வருபவன் அல்ல. அவன் சான் ஜோஸிலிருந்து (San Jose) வருகிறான். மகனே நீ விசுவாசிக்கிறாயா? இன்னொரு காரியம், உன்னுடைய தகப்பன் இங்கு உன்னோடு உள்ளார். அவர் ஒரு ஊழியக்காரர். அது சரி. உன்னுடைய பெயர் என்னவென்பதை தேவன் எனக்கு கூறுவார் என்று விசுவாசிக்கிறாயா? அது உன்னை பலமாக விசுவாசிக்க செய்யுமா? உன்னுடைய பெயர் ரூபன். இப்பொழுது விசுவாசி. எல்லாம் சரி. போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார். ஓ பாவியே, ஓ வியாதியுள்ளவனே, போதகர் மனிதருள், விசுவாசிகள் மத்தியில் வெளிப்படுவதை காண்கிறாயா? தம்மை விசுவாசிக்கிற பிள்ளைகளை சுகத்திற்கு அழைக்க அவர் வந்திருக்கிறார். பாவியை மனந்திரும்புதலுக்குள் அழைக்க அவர் வந்துள்ளார். பின்மாற்றக்காரனே, சபை உறுப்பினனே, போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார். 70அதை நீ விசுவாசிக்கிறாயா? இப்பொழுது உன்னுடைய தேவைக்காக அவரை விசுவாசிக்கிறாயா? அப்படியென்றால், “எழுந்து உன்னுடைய கையை உயர்த்தி என்னுடைய தேவைக்காக விசுவாசிக்கிறேன்'' என்று கூறு. பிறகு எழுந்து நின்று அதை ஏற்றுக் கொள். போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார். நீ யாராயிருந்தாலும் சரி. உனக்கு எந்த தேவையாயிருந்தாலும் சரி, போதகர் வந்திருக்கிறார் உன்னை அழைக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அந்த சிறிய பெண் ஊருக்குள் போய் “என்ன தவறு நேர்ந்தது என்று ஒரு மனுஷன் எனக்குச் சொன்னான்'' என்று கூறினாள். நீ ஊருக்குள் செல்லவில்லை. நீயே வந்து அதை பார்த்துள்ளாய், ஆதலால் போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார். உங்களுடைய கரங்களை உயர்த்தி அவரைத் துதித்து, ''ஆண்டவரே இயேசுவே, நான் ஒரு பாவி; என்னை மன்னியும். நான் ஒரு பின்மாற்றக்காரன்; என்னைத் திரும்ப சேர்த்துக் கொள்ளும், கர்த்தாவே எனக்கு பரிசுத்த ஆவி தேவை; என்னை நிரப்பும்; என்னை சுகப்படுத்தும். நான் முடவனாயிருக்கிறேன்; என்னை சுகப்படுத்தும்'' என்று கூறுங்கள். போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார். உங்களுடைய கரங்களை உயர்த்தி அவரைத் துதியுங்கள். 71நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? “நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன்'' என்ற பாடலுக்கு ஒரு சிறிய சுருதியைத் தாருங்கள். ''நான் அவரைத் துதிப்பேன்'' உங்களுக்கு தெரியுமா, தெரியுமல்லவா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அவரைத் துதிப்பேன், நான்அவரைத் துதிப்பேன் ஓ பாவிகளுக்காக பலியான ஆட்டுக் குட்டியை துதி எல்லா ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் போக்கிற்று. நீங்கள் அவரைநேசிக்கிறீர்களா? அவர் இங்கிருக்கின்ற வேளையில் அவரை நோக்கி பாட நீங்கள் விருப்பமாயுள்ளீர்களா? உங்களுடைய இருதயங்களையும், உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் அவர் அறிவார். நம்முடைய முழு இருதயத்தோடும் அதை அவருக்கு பாடுவோம். நான் அவரைத் துதிப்பேன் (நீங்கள்து திக்கும்போது கரங்களை உயர்த்துங்கள்) நான்... (இப்பொழுது அவரைத் துதியுங்கள்)... துதிப்பேன். ஓ பாவிகளுக்காக பலியான ஆட்டுக் குட்டியை துதி எல்லா ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் போக்கிற்று. ஓ, சக்கர வண்டியிலிருக்கும் ஸ்திரீயே, இன்னும் சிறிதளவு சரியாக அவரை விசுவாசிப்பாயானால். “நான்...” இன்னும் ஒரு விசை நாம் பாடுவோம். ஒரு காரியத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன் ஓ பாவிகளுக்காக பலியான ஆட்டுக் குட்டியை துதி எல்லா ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் போக்கிற்று. இப்பொழுது நாம் மறுபடியும் அதை பாடுகின்ற வேளையில் திரும்பி யாருடைய கரத்தையாவது பிடித்துக் கொள்ளுங்கள். ''நான் அவரைத் துதிப்பேன்'' பாருங்கள், எல்லாருமாக இப்பொழுது. நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன் பாவிகளுக்காக பலியான ஆட்டுக் குட்டியை துதி எல்லா ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் போக்கிற்று. 72ஓ பாவியான நண்பனே, இப்பொழுது இங்கு நடந்து வர மாட்டாயா? எல்லா ஜனங்களே வந்து அவருக்கு துதியை செலுத்துங்கள். அவரை இரட்சகர் என்று அறிக்கையிட விரும்பும் எல்லா மக்களும் அவருடைய சமுகத்தில், பரிசுத்தவான்கள் அவரை ஆவியினால் தொழுது கொண்டிருக்கின்ற இவ்வேளையில் நீ இங்கு வந்து நிற்பாயா? ''நான் இன்றிரவு சாட்சி கொடுக்க வேண்டும். நான் அவரை துதிக்கவேண்டும். நான் வர விரும்புகிறேன். அவரைக் குறித்து நான் வெட்கமடைவதில்லை. இங்கு அவர் பிரசன்னமாயிருக்கையில் நான் அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் என்று உலகம் அறியவேண்டும்'' என்று கூறு. நாங்கள் பாடும்போது வா. நான் அவரைத் துதிப்பேன், (நீ வரமாட்டாயா?) நான் அவரைத் துதிப்பேன், ஓ பாவிகளுக்காக பலியான ஆட்டுக் குட்டியை துதி; எல்லா ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் போக்கிற்று. 73ஓ, அதுதான், ஸ்திரீயே வா, வேறு யார் கிறிஸ்துவினுடைய பிரசன்னத்திற்கு வரப்போவது? சகோதரியே இங்கே வாருங்கள், இங்கு நில்லுங்கள். இன்னும் வேறு யாராவது அவரை தம்முடைய சொந்த இரட்சகராக இப்பொழுது ஏற்றுக் கொள்வாரா, அதைக் குறித்து வெட்கப்படாதவர். “மனுஷர் முன்பாக என்னைக் குறித்து நீ வெட்கப்பட்டால் என்னுடைய பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர் முன்பாகவும் உன்னைக் குறித்து நான் வெட்கப்படுவேன்'' என்று கூறியிருக்கிறார். இப்பொழுது அவரைக் குறித்து வெட்கமடையாதிருப்பாயானால், அவர் இங்கிருக்கும்போது அவரை உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வாயானால்! நீ அவரை கண்டிருக்கிறாய். வார்த்தையானவர் தாமே அதைப் பரிபூரணமாய் காண்பிக்கிறார். பரிசுத்தவான்கள் இப்பொழுது தொழுது கொண்டிருக்கும் வேளையிலே நீ வா. நீ வரமாட்டாயா? ஐயா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. இங்கு ஒரு வயோதிப ஸ்திரீ வருகிறார்கள், உண்மையான காலத்துக்கு வருகிறார்கள். நீ இப்பொழுது வரமாட்டாயா? நான்... (அதைப் பாடுங்கள்). நான் அவரைத் துதிப்பேன். அது சரி, வாலிப ஜனங்களே, இதைச் சுற்றி வாருங்கள். துதியுங்கள். ஸ்திரீயே கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக, அப்படிதான் அதைச் செய்ய வேண்டும். வாலிப மக்களே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ...பாவிகளுக்காக பலியானர் எல்லா ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் போக்கிற்று. ஊழியக்காரர்கள் இப்பொழுது இம்மக்களிடம் போகும் வேளையில் யாராவது வருவார்களா? பின் மாற்றக்காரனே, “நீ வந்து என் ஜீவியத்தைக் குறித்து வெட்கமடைகிறேன்'' என்று கூறுவாயா? அவர் இங்கிருக்கிறார். நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். ஏன், இயேசுகிறிஸ்து நம் மத்தியில் உள்ளார். இப்பொழுது நீ வருவாயா? அவரைத் துதியுங்கள். (நீ வந்து அவருக்கு மகிமையை செலுத்துவாயா?) ஜனங்கள். அவருடைய இரத்தம் ஒவ்வொரு... 74மார்த்தாளே இப்பொழுது வருகிறாயா அல்லது மரியாளுடன் நீ வீட்டிலேயே இருக்கப் போகின்றாயா? கிறிஸ்துவானவர் தம்மை வெளிப்படுத்துகையில் நீ ஒரு ஸ்தாபனத்திலேயே தங்கி ''என்னுடைய சபை இதை இப்படி விசுவாசிப்பதில்லை'' எனக் கூறப் போகிறாயா? நீ அங்கு உட்கார்ந்து அதைக் கூறப்போகிறாயா? அல்லது வெளியில் வரப்போகிறாயா? “நல்லது நான் எப்பொழுது வா...'' இல்லை இன்றைக்கே, இதுதான் அந்த மணிநேரம். யவீருவின் குமாரத்திக்கு நேர்ந்தது போல மரணமானது உன்னை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. பின் மாற்றக்காரனே, பாவியே இப்பொழுதே வா, இதுதான் நேரம். போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார். ''எனக்கு எப்படி தெரியும்'' என்று நீ கூறலாம். அவர் என் சத்தத்தை உபயோகப்படுத்துகிறார். என் சத்தத்தை உபயோகித்து வியாதிகள், துன்பங்கள், மற்றக் காரியங்களைக் கூறுவாரானால் பாவத்திலிருந்தும் உன்னை அழைக்கிறார் என்று நீ அறிய வேண்டுமல்லவா. வெளியே வா! ஒரு வேளை உனக்கு இது ஒரு கடைசி தருணமாயிருக்கலாம். இப்பொழுதே வா. 75இன்னும் ஒரு விசை, நண்பர்களே இங்கு வர வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். நான் இப்படி கூப்பிட்டு உங்களை தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாக்க விரும்பவில்லை. அது சரியல்ல. நீ சில வேளை... பரிசேயர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் இரட்சிக்கப்படவில்லை. நீயும் அதேபோல நினைத்துக் கொண்டிருக்கிறாய். இப்பொழுதே வா. கவனமாயிரு! அதைக் குறித்து பாதியளவு நினைத்து வராதே. அதைக் குறித்து சிறிது சந்தேகம் உன் சிந்தையில் இருக்குமானால், நேரத்தை எடுக்காதே. இப்பொழுதே வா. ஊற்றானது திறந்திருக்கும் வேளையில், பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கும் சமயத்தில், இதுதான் நேரம். போதகர் வந்திருக்கிறார். அந்த சிறிய சந்தேகத்தைக் குறித்துதான் உன்னிடம் கூற முயற்சிக்கின்றார். ''நீ சந்தேகிக்கிறாய்'' அதை எடுத்துப் போடு. இப்பொழுதே வா. போதகர் வந்திருக்கிறார் உன்னை அழைக்கிறார். அதுசரி வந்து கொண்டே இருங்கள், நான் அவரைத் துதிப்பேன், நான்அவரைத் துதிப்பேன் (நீ அவருக்கு துதியை செலுத்தமாட்டாயா?) பாவிகளுக்காக பலியான ஆட்டுக் குட்டியை துதி; எல்லா ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கரையையும் போக்கிற்று. இப்பொழுது பாவியானவர்கள் அவரை உரிமைகொள்ள வந்து கொண்டிருக்கையில் நாம் இப்பொழுது பாடி, மக்கள் அவரை துதிக்கச் செய்வோம். எல்லோருமாக கரங்களை உயர்த்தி அவரைப் பாடித் துதியுங்கள். நான் அவரைத் துதிப்பேன், நான்அவரைத் துதிப்பேன். பாவிகளுக்காக பலியான ஆட்டுக்குட்டியை துதி! அவருக்கு துதியைச் செலுத்துங்கள். இங்கிருக்கும் மக்களே ஜெபியுங்கள். உங்களை மன்னிக்க கோருங்கள். அதைத்தான் அவர் செய்வார். போதகர் வந்திருக்கிறார் உன்னை அழைக்கிறார். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.